கடந்த 2018 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அரசியல் கதைகளத்தை கொண்டு வெளியான திரைப்படம் ‘சர்க்கார்’. மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான சர்க்கார் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல ஒப்பனிங்கை பெற்றது. படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்களும் பெரிதாக எடுபடவில்லை. விஜய் படங்கள் என்றாலே பாடல்களுக்கு தனி மவுசு உண்டு. அந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்ததால் இந்த படத்திற்கும் தனி எதிர்பார்ப்பை ரசிகர்கள் கொண்டிருந்தனர். ஆனால் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எடுபடமால் போனது. குறிப்பாக படத்தில் குத்து பாடலாக இடம் பெற்ற ‘சிம்டாங்காரன்’ பாடல் மிகப்பெரிய எமாற்றாமாக அமைந்தது. விவேக் வரிகளில் மறைந்த பாடகர் பாம்பா பாக்யா, விபின் அனாஜா, அபர்ணா நாராயணன் ஆகியோர் பாடிய சிம்டான்காரன் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. அதே நேரத்தில் சில காலத்திலே ரசிகர்களுக்கு அந்த பாடல் பிடித்து போக தற்போது இணையத்தில் 72 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலுக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனம் குறித்து நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பகிர்ந்து கொண்டவை,
“அந்த பாடல் வெளியான போது என்னை நிறைய திட்டினார்கள். (சிரித்தார்) என்னையும் பாடலாசிரியர் விவேக்கையும். பின் அந்த பாடல் அது 50 விருந்து 100 மில்லியனை யூடியூப் பார்வைகளை பெற்றுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்பு 'டண்டனக்கா’ இசையில் வரும் எதிர்பார்த்தனர். அதிலிருந்து விலகிச் செல்லும்போது, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அது பொருந்தவில்லை. அந்த நேரத்தில் வெளியிடப்பட்டது தவறான பாடல் என்று நினைக்கிறேன் சில நேரங்களில் இதை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். " என்றார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
மேலும் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது 31 ஆண்டு கால திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட வீடியோவை காண..