தமிழ் சினிமாவில் மிக முக்கிமான இயக்குனார்களில் ஒருவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். சமூக கருத்துகளை கமர்ஷியல் திரைப்படங்கள் மூலம் வெகுஜன மக்களிடம் பரவலாக கொண்டு சேர்த்து வெற்றியை பெறுவது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிப்பதும் இவருக்கு கை வந்த கலை. அதன்படி ரமணா, கத்தி, ஏழாம் அறிவு போன்ற பல படங்களை கொடுத்தவர். அஜித், விஜய், விஜயகாந்த், ரஜினிகாந்த் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவாரானார் ஏஆர் முருகதாஸ். தற்போது அவர் இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பு, கதை என பலதுறைகளில் இயங்கி வருகிறார். அதன்படி பல வெற்றி படங்களை தயாரித்த ஏ ஆர் முருகதாஸ் தற்போது தயாரிக்கும் திரைப்படம் ஆகஸ்ட் 16 – 1947. அட்டகாசமான கதைகளத்தில் உருவான இப்படம் வரும் ஏப்ரல் 14 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு படம் குறித்த பல சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களுடைய கற்பனை வளம் குறித்து பேசுகையில் அவர்,
"நல்ல எழுத்தாளர்களுடைய எழுத்தை படிக்கும் போது ஒரு ஊக்கம் அதிலிருந்து கிடைக்கும் உதாரணமாக கணேஷ் வசந்த் புத்தகத்தில் சுஜாதா சார் எழுதிய அந்த வசந்த் கதாபாத்திரத்திரம் தான் துப்பாக்கி பட ஜெகதீஷ் கதாப்பாத்திரம்.
அதில் வசந்த் கதாபாத்திரத்திரம் எந்த பிரச்சனை வந்தாலும் அதை நகைச்சுவையாக தான் கையாளுவார். கொலையே நடந்தாலும் அது பற்றி கணேஷ் சீரியஸா பேசும்போது வசந்த் ஒருபுறம் ஒரு பெண்ணிடம் வழிந்து பேசுவார். அந்த கதாபாத்திரம் ரொம்ப ஆத்மார்த்தமா இருக்கும். சுஜாதா சார் இறப்பு போன போது எனக்கு அதிர்ச்சியானதே அவருடன் சேர்ந்து கணேஷ் வசந்த் எல்லோரும் இறந்துட்டாங்களே என்பது தான் வலியாய் இருந்தது. அவருடைய நாவல் கதாபாத்திரங்கள் நிறைய எனக்கு ஊக்கம் கொடுத்துள்ளது." என்றார்.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012 ல் வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’. வித்யாசமான குணாதிசயத்துடன் மிடுக்கான இராணுவ வீரர் போல் உருவாக்கி வழக்கமான விஜய் தோற்றத்தை வேறு கோணத்தில் புதுமையாக கொடுத்த படம் துப்பாக்கி. சொல்லப் போனால் விஜய் திரைப்பயனத்திலே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது துப்பாக்கி திரைப்படம். படம் வெளியாகி மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. இன்றும் விஜய் ரசிகர்கள் பலர் கொண்டாடும் படமாக துப்பாக்கி இருந்து வருகிறது.
மேலும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான பல தகவல்களை உள்ளடக்கிய வீடியோ இதோ..