பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை பாராட்டிய பாலிவுட் இயக்குனர்!
By Anand S | Galatta | April 27, 2022 15:09 PM IST
தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான படைப்புகளை புகைப்படங்களாக வழங்கி வருபவர் இயக்குனர் பார்த்திபன். முன்னதாக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இதனையடுத்து இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் பாலிவுட்டில் ரீமேக்கான ஒத்த செருப்பு படத்தில் பல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில் அடுத்ததாக தனது இயக்கத்தில் சாதனை முயற்சியாக இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.
உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் திரைப்படமாக தயாராகியுள்ள இரவின் நிழல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இரவின் நிழல் படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். இயக்குனர் பார்த்திபனின் இந்த உலக சாதனை முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக ASIA புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகங்களில் இரவின் நிழல் படம் இடம் பிடித்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் திரைப்படம் குறித்து வெகுவாக பாராட்டி உள்ளதாக இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப் உடனிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். தனக்கே உரித்தான பாணியில் இயக்குனர் பார்த்திபன் பதிவிட்ட அந்த பதிவு இதோ…
Anurag Kashyap
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 27, 2022
இந்தப் பெயர் … இந்தி’ய அளவிலிருந்து உலக அரங்கிற்குள் ஊடுருவி பிரசித்திப் பெற்றது.
இரவின் நிழல்’ கண்டபின் இருக்கையிலிருந்து எழாமல் மொபைலில் உலகத் திரைப்பட விழாக்களுக்கு ‘ கண்டதில்லை இதற்கு முன் இப்படி ஒரு பட’மென மெயில் அனுப்பினார். “Amazing”என்றபடி continue pic.twitter.com/4VJRvgmJJU