அழுத்தமான கதைகளும் எளிய மனிதர்களின் வாழ்வியலையும் உயிரோட்டமான திரைக்கதையில் கொடுக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமான இயக்குனர் வசந்த பாலன். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி அவருடைய எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பிலே வெயில் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் வசந்த பாலன் தொடர்ந்து அங்காடி தெரு, அரவாண், காவிய தலைவன் போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை கொடுத்தார். இன்றும் இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வருகிறது. இவரது முந்தைய திரைப்படமான ஜெயில் திரைப்படம் பெரிதளவு வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை அதை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்போது அவர் இயக்கி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அநீதி’.
கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் புகழ் பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநயாகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் எம். கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், வசந்த பாலன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எட்வீன் ஒளிப்பதிவு செய்ய ரவிகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அட்டகாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. வரும் ஜூலை 21ம் தேதி இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வழங்கும் அநீதி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் வசந்த பாலன்,
“நான் ஐசியூ ல மூச்சி தினறி இருந்தேன். அப்போ என் நண்பன் எனக்கு உதவி செஞ்சு என்ன பிரச்சனைனு கண்டறிய முடிந்தது. அன்னிக்கு அந்த உதவி கிடைக்கலனா எனக்கு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டிருப்பாங்க. இந்த வாழ்கையே எனக்கு ஆசிர்வாதம் னு நினைக்குறேன். ஷங்கர் சார், நான் எப்பொல்லாம் வாழ்கையில கஷ்டம் னு வந்து நிக்கிறேனோ அந்த நேரத்தில கதை சொல்றா படம் பண்ணுவோம் னு சொல்லி எனக்கு 'வெயில்' கொடுத்தார். அப்பறம் நான் தயாரிப்பாளராக மாதிரி இந்த அநீதி கொண்டு போனேன். அவர் நான் படத்தை வழங்குகிறேன் என்றார். நான் 30 வருஷம் அவரோட உதவியாளராக இருக்கிறேன். இந்த அன்பிற்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மற்றொருவர் ஜிவி பிரகாஷ், நான் அவரை 17 வயது பையனா பார்த்திருக்கிறேன். இன்னிக்கு ஜிவி தமிழ் தெலுங்கு இந்தி னு பெரிய உயரத்திற்கு போயிருக்கார். அப்போதும் நான் இருக்கிறேன் சார் என்று சொல்லி இந்த படத்திற்கு பணியாற்ற வந்தார். நான் இருக்கிறேன் என்ற குரல் அவரிடம் இருந்து எப்போதும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு நிறைய உதவி பண்ணிருக்காங்க.. இந்த அன்பிற்கு என்ன பண்ணுவேன்.” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார் இயக்குனர் வசந்த பாலன்