மிகப்பெரும் ஆளுமை, நடிகர், கதாசிரியர்,  இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகதிறமை கொண்ட திரு விசு அவர்களின் இழப்பு, தமிழ் சினிமவிற்கே பேரிழப்பு. லட்சக்கனக்கான மக்கள், இயக்குநர்கள், கலைஞர்கள் என பலருக்கும் ஆதர்ஷமாக விளங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. தமிழ் சினிமாவின் பாதையை மாற்றியமைத்த ஜாம்பவான்களில் ஒருவர் அவர். 

ammacreationsTsiva

கதை சொல்லலில் புதிய வடிவத்தை புகுத்தியவர். குடும்பக்கதைகளை சொல்வதில் அவருக்கு இணையானவர் எவரும் கிடையாது. அவர் ஒரு பிறவி நடிகர், முன்னணி பாத்திரம் ஆனாலும் சரி, கௌவர தோற்றம் என்றாலும் சரி, அவரை மிஞ்ச ஆள் இல்லை என்னும்படி, தனது பாத்திரத்தை செய்வதில் வல்லமை மிக்கவர். அவர் எனது முந்தைய தயாரிப்பான சின்ன மாப்ள படத்தின் படப்பிடிப்பில், நடித்த முதல்நாள், எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. 

Visu

முதல் நாளே படப்பிடிப்பை அரை நாள் ஒத்திப்போட சொன்னார். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியானோம். அப்படத்தில் அவரது பாத்திரம் தான் முன்னிலையில் இருக்கும் ஹீரோவை விட அவரது பாத்திரத்திற்கு வலு அதிகம், ஆனால் அவர் அப்படி செய்ய வேண்டாம் எனக்கூறி, படக்குழுவுடன்  கலந்தாலோசித்து ஹீரோ பாத்திரத்திற்கு மேலும் வலு சேரும்படி கதையை மாற்றியமைத்தார். படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாக அது அமைந்தது. தன்னை விட அவருக்கு திரைப்படத்தின் வெற்றியே எப்போதும் முக்கியம். 

visu

அவரது அளவிலா ஆதரவிற்கு என்றென்றும் நன்றிகடன் பட்டுள்ளேன். அவரது திரைப்பணிகள்,  கதைகள் காலகாலத்திற்கும் வரலாற்றில் அவரை நினைவில் இருத்தி வைக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். என்று அம்மா கிரியேஷன்ஸ் சிவா கூறியுள்ளார்.