ஒரே படத்தில் ஐந்து முன்னணி இயக்குனர்களை இணைத்த அமேசான் ப்ரைம் !
By Aravind Selvam | Galatta | September 30, 2020 12:14 PM IST
வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம், இரண்டாவது வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான - சுதா கொங்கரா,கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப்டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங்கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.
மும்பை, இந்தியா, செப்டம்பர் 30, 2020 - வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள புத்தம் புது காலை என்ற திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ அறிவித்திருக்கிறது. இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கள் -
இளமை இதோ இதோ - சுதா கொங்கரா இயக்கியுள்ளார். (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரை போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) ஆகியோர் நடித்துள்ளனர்.
அவரும் நானும்/ அவளும் நானும் - கவுதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்கியத்தில் எம்.எஸ். பாஸ்கர் (சிவாஜி த பாஸ்) மற்றும் ரீத்து வர்மா (பெல்லி சூப்புலு) ஆகியோர் நடிக்கின்றனர்.
காஃபி, எனி ஒன்? - சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதி ஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோர் நடிக்கின்றனர்.
ரீயூனியன் - ராஜீவ் மேனன் (கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்) இயக்கத்தில், ஆண்டிரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கண்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
மிராக்கிள் - கார்த்திக் சுப்புராஜ் (பேட்டை) இயக்கத்தில் பாபி சிம்ஹா (பேட்டை), முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடிக்கின்றனர்.
நிஷப்தம், பென்குயின், பொன்மகள் வந்தாள் போன்ற பல தமிழ் படங்கள் மற்றும் அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்டான் செம காமெடி பா போன்றவற்றின் வெற்றிகரமான வெளியீட்டை தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடவுள்ள முதல் ஆந்தாலஜி திரைப்படத்தை 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 16, 2020 முதல் ஸ்டிரீம் செய்ய முடியும்.
புத்தம் புது காலை திரைப்படம் ‘ஊரடங்கு தளர்வின்’ போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது.
"நம்பிக்கை, காதல் மற்றும் புதிய தொடக்கங்களை பற்றி பேசவும் மற்றும் இந்த சவாலான காலக்கட்டத்தில் கலை மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கொள்ளும் நோக்கத்துடனும் புத்தம் புது காலை உருவானது, மேலும் புத்தம் புது காலை மூலம் தமிழ் பொழுதுபோக்கு துறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் படைப்புக்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்று அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.
5 of your favorite storytellers bring you 5 heartwarming stories!#PuthamPudhuKaalai, October 16.@menongautham @Sudhakongara_of @DirRajivMenon @hasinimani @karthiksubbaraj pic.twitter.com/mb4vfQJKpr
— amazon prime video IN (@PrimeVideoIN) September 30, 2020
Meena's latest PPE Outfit Pictures go viral on social media - check out!
30/09/2020 04:00 PM
Is Maddy playing the villain in this mega biggie? - Official Statement here!
30/09/2020 03:19 PM