முக்கிய திரையரங்கில் வலிமை சிறப்பு காட்சிகள் ரத்து ! வருத்தத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | February 22, 2022 21:46 PM IST
தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் 2022 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.இதற்கு முன் இதே கூட்டணியின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.பல இடங்களில் சிறப்பு காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டு வருகிறது.
அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் படம் தொடங்கவுள்ளது என்று தெரிகிறது.சென்னையின் பிரபலமான திரையரங்குகளில் ஒன்று ரோஹிணி.ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக மிகவும் புகழ்பெற்றதாக இந்த திரையரங்கம் இருந்தது.பலரும் இந்த திரையரங்கில் முதல் ஷோ பார்க்கவேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்பார்கள்.
சில காரணங்களால் இந்த திரையரங்கில் காலை 4 மணி ஷோ மற்றும் 7 மணி சிறப்பு காட்சிகள் இருக்காது என்று விநியோகஸ்தர் தகவல் தெரிவித்துள்ளார்.இந்த திரையரங்கில் படத்தினை காண ஆர்வத்துடன் இருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் உள்ளனர்.
#Rohini திரையரங்கிற்கு 4 & 7 மணி காட்சிகள் இல்லை என்பதை தல ரசிகர்களுக்கு மிக வருத்ததோடு தெறிவித்துக்கொள்கிறோம் #kasi #vetri & #Gkcinemas திரையரங்குகளில் 4 மணி ஸ்பெஷல் காட்சி திரையிடப்படுகிறது பார்த்து மகிழுங்கள் 2022ன் முதல் திருவிழாவை கொண்டாடுங்கள் 🔥 #Valimai #AjithKumarSir
— Kalaimagan (@Kalaimagan20) February 22, 2022