தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK 61 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கி ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மஞ்சு வாரியார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

2022 தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது ராஜதந்திரம்,நடுநிசி நாய்கள் படத்தில் நடித்து பிரபலமான இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதை அஜித்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.அஜித்துடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் மீண்டும் அவருடன் வேலை பார்க்காவிட்டாலும் இந்த நினைவுகள் எப்போதும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இதன்மூலம் இவர் AK 61 ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.