அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்திய படமாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி 11 ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் இன்று வரை திரையரங்குகளை ஹவுஸ் புல்லாக வைத்திருக்கின்றது. நேர்கொண்ட பார்வை, வலிமை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் மற்றும் போனி கபூர் உடன் இணைந்து அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு வெளியாகி உலகளவில் வசூல் குவித்து வருகிறது.
இந்நிலையில் படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்த சுப்ரீம் சுந்தர் நமது கலாட்டா தமிழ் மீடியா பேட்டியில் கலந்து கொண்டு துணிவு படம் குறித்தும் சண்டை காட்சிகள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். படம் பார்த்து விட்டு அஜித் உங்களிடம் என்ன பகிர்ந்து கொண்டார் என்ற கேள்விக்கு,
அவர், “அஜித் சார் படம் பார்த்து விட்டு அழைத்தார் ‘சண்டை காட்சிகளெல்லாம் நல்லா இருந்தது குறிப்பாக 360 டிகிரி சண்டை காட்சிக்கு பார்வையாளர்களிடம் நன்றாக வரவேற்பு பெற்றது’ என்று பாராட்டினார்.”
மேலும் துணிவு பட வெளியீட்டின் போது முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் ஓடும் லாரி மீது ஏறி தவறுதலாக விழுந்து விபத்துக்குள்ளாகி இறந்து போனார். இது குறித்து துணிவு பட சண்டை வடிவமைப்பாளர் “அவர் இறந்ததையடுத்து அன்று நானும் அஜித் சாரும் நல்ல மனநிலையில் இல்லை. அஜித் சார் படபிடிப்பில் சண்டை பயிற்சி குழுவில் யாருக்காவது விபத்து நேர்ந்தால் அந்த காட்சி வேண்டாம் என்று சொல்வார். அந்த காட்சியை மாற்றி வைக்க சொல்வார். அவர் வருத்தப்படுவார்.. நான் எனக்கு நல்ல பெயருக்காக அந்த சண்டை காட்சியை வடிவமைப்பேன், அவர் அந்த சண்டை காட்சி செய்யும் நம்பரை அழைத்து முன்னெச்சரிக்கை குறித்து விசாரிப்பார். அவரது சூழல் குறித்து விசாரிப்பார். ரசிகர்களுக்கு அவர் சொல்றதை தான் நானும் சொல்றேன், குடும்பத்தை பாருங்க அது தான் முதல் முக்கியமானது அதை பின்பற்றுங்கள். படம் எடுக்குறது எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதற்கு மட்டும்தான். குடும்பத்தை இழந்து விட கூடிய சூழலில் கொண்டு போய் விடாதீர்கள். எல்லா பட ஹீரோ ரசிகர்களும் படத்தை பார்த்து கொண்டாடுங்கள். இது போல விஷயங்களை தவிர்த்து ஜாக்கிரதையா இருங்க.. “ என்று குறிப்பிட்டார்.
மேலும் துணிவு படபிடிப்பு தளம் குறித்தும் துணிவு சண்டை காட்சிகள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..