சூப்பர்ஸ்டார் வைத்து படம் ? ரசிகர்கள் ஏக்கம்
By Sakthi Priyan | Galatta | April 09, 2019 17:17 PM IST
தமிழ் திரையுலகில் சிறந்த பெண் இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா தனுஷ். 3, வை ராஜா வை போன்ற படங்கள் தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
இன்று ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படம் தர்பார் என டைட்டிலுடன் முதல் லுக் வெளியானது. வின்சி ராஜின் டிசைனில் உருவான இந்த முதல் லுக் போஸ்டர் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் முன் வீட்டில் இறை வழிபாடு செய்துவிட்டு சென்றிருக்கிறார். லதா ரஜினிகாந்த் ஆரத்தியை காண்பிக்கும் நேரத்தில் ஐஸ்வர்யா ஒரு செல்ஃபியை எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.
பெற்றோர்களிடம் இதுபோன்ற குறும்புத்தனமான விஷயங்கள் செய்வது அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைத்த வரம் என்றே கூறலாம். இதை கண்ட சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் விரைவில் ஐஸ்வர்யாவுடன் படம் செய்வாரா ? என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர்.