ரஜினி கமல் படத்திற்கு பிறகு விஜய் படத்தில் நடக்கும் அதிசயம் !
By Sakthi Priyan | Galatta | March 13, 2019 11:10 AM IST
கோலிவுட்டின் தரமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் விஜய். தலைவா, மதராசாப்பட்டினம், தெய்வத்திருமகள், சைவம் போன்ற படங்களை இயக்கியவர். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கியுள்ள வாட்ச்மேன் படமும், பிரபுதேவாவை வைத்து இயக்கியுள்ள தேவி 2 படமும் ஒரே நாளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக விளங்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வைத்து அதிக படங்களை இயக்கியவர் மதிப்பிற்குரிய இயக்குனர் SP முத்துராமன். இவருடன் நேற்று நம் கலாட்டா குழு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட போது தமிழ் சினிமாவின் தற்போதைய வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் இயக்குனர்களின் திறமை பற்றி பகிர்ந்துகொண்டார்.
SP முத்துராமன் இயக்கத்தில் வெளியான சகலகலா வல்லவன் மற்றும் எங்கேயோ கேட்ட குரல், இந்த இரு படமும் ஒரே நாளில் தான் வெளியாகி விருத்தளித்தது. அதற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படங்கள் தான் ஏப்ரல் 12-ம் தேதி வெளிவர காத்திருக்கிறது. 36 வருடம் கழித்து இதுபோன்ற விஷயம் நடப்பது ரசிகர்களின் ருசிக்கு சரியான தீனியாகும்.
திரை விரும்பிகள் அறியாத பல உன்னதமான செய்திகளை உங்களின் பார்வைக்கு கொண்டு வருவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.