தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2007 ல் வெளியான முனி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா. மதராசி படத்தில் அறிமுகமான இவருக்கு முனி திரைப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அப்படத்தை தொடர்ந்து வேதிகா விற்கு வாய்புகள் குவிய தொடர்ந்து காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன் ஆகிய படங்களில் நடித்து நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமாகினார். சமீபத்தில் வேதிகா மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து காஞ்சனா 3 படத்தில் நடித்தார். தற்போது இவர் தமிழில் வினோதன் என்ற படத்திலும் ஜங்கில் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் அழுத படி மிகுந்த கோவத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த மே 7ம் தேதி லண்டனில் நாய்களை உரிமையாளர் கண் முன்னே துரத்தி சுட்டு கொன்ற 7 போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர வேண்டி கோவமாக வேதிகா பேசியிருந்தார். வீடியோவில் “சுடப்பட்டு இறந்த மார்ஷல் மற்றும் மில்லையன்ஸ் நாய்களின் உரிமையாளார் வீடில்லாதவர் என்பதற்காக என்ன வேணாலும் செய்யலாம் என்று போலீஸ் நினைத்து விட்டார்களா? இது போன்ற சூழ்நிலையில் அங்கிருந்த 7 போலீஸில் ஒருவர் கூடவா பொறுமையாக இருக்க வேண்டும் என தோன்றவில்லை?.. அவர்கள் சுட்டு கொன்றதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது என்ன உலகம். அப்பாவி நாய்கள் வாழ்கையை இழந்து விட்டன.. அதிகாரத்தை ஒரு போதும் தவறாக பயன்படுத்த கூடாது.. இது ஒரு கொடூரமான வன்முறையான வெறியாட்டம்.” என்று அழுதபடி கோவத்துடன் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு நாயின் உரிமையாளரை பார்த்து மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் என்ற நாய்கள் குறித்து புகார் எழுந்துள்ளது. இதையடுத்து விசாரிக்க வந்த போலீசார் நாய்களுடன் உரிமையாளர்களை கையில் துப்பாக்கியுடன் துரத்தியுள்ளனர். ஒரு இடத்தில் நாய்களையும் உரிமையாளர்களையும் பிடித்து விசாரிக்க நாய்கள் போலீசை பார்த்து குரைத்திருக்கின்றது. அந்த தருணத்தில் மார்ஷல் என்ற நாயை தலையில் சுட்டுள்ளனர் போலீசார். பின் மில்லியன்ஸ் நாய் குரைத்து கொண்டே பயந்து ஓட அந்த நாயையும் போலீஸ் சுட்டுள்ளனர்.
இரு நாய்களும் அந்த பெண்ணை தாக்கியதாக புகார் எழுந்த நிலையில் இந்த விசாரணை நடைபெற்றது என்று கூறப்படுகிறது. பின் அந்த உரிமையாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். பின் நாய்கள் இறந்த செய்தி வைரலாக பரவி பரப்பை ஏற்படுத்தியது. அந்த 7 போலீஸையும் வேலையை விட்டு தூக்கச் சொல்லியும் மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ நாய்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வேதிகா நாய்களுக்கும் உரிமையாளருக்கு நீதி கிடைக்க மனு கடிதம் ஒன்றுடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Please sign the petition here https://t.co/RAySOvmpo4 #JusticeForMarshallandMillions @metpoliceuk @MayorofLondon @aspca @peta @petauk @BBCNews @MoveTheWorldUK pic.twitter.com/y24hhbGvAx
— Vedhika (@Vedhika4u) May 20, 2023