தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை கனிகா இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா கதாநாயகனாக நடித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாதவனின் எதிரி, இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகை கனிகா அஜித்குமார் மூன்று வேடங்களில் அசத்திய வரலாறு திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து பழசிராஜா, துரோணா 2010, கோப்ரா, பாவுட்டியுடே நாமத்தில், ஆபிரகாமின்டே சந்ததிகள், மாமாங்கம், CBI 5 - THE BRAIN ஆகிய படங்களிலும், நடிகர் மோகன்லால் உடன் இணைந்து கிறிஸ்டியன் பிரதர்ஸ், ஸ்பிரிட், டிராமா, ப்ரோ டாடி ஆகிய படங்களிலும் நடித்த நடிகை கனிகா நடிகர் ஜெயராமுடன் இணைந்து பாக்ய தேவதா, லோனாப்பண்டே மமோதீசா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் டப்பிங் கலைஞராக தளபதி விஜய்யின் சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவிற்கும், சீயான் விக்ரமின் அந்நியன் திரைப்படத்தில் சதாவிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் படத்தில் ஸ்ரேயாவிற்கும் நடிகை கனிகா குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வெள்ளித்திரையில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நடிகை கனிகா சின்னத்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் மெகா தொடரில் கனிகா நடித்து வருகிறார். இதனிடையே காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தற்போது நடிகை கனிகா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டு போட்ட படி நடைபழகும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை கனிகா, "புதிய பூட்ஸில் நடக்க கற்றுக் கொள்கிறேன். ஒரு வாரம் கடந்து விட்டது. இன்னும் ஐந்து வாரங்கள் கழிய வேண்டும்" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நடிகை கனகாவுக்கு கால் முட்டியிலும் அடிபட்டுள்ளது. இந்த காயங்களில் இருந்து நடிகை கனகா விரைவில் மீண்டு வர கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது. நடிகை கனிகா காலில் கட்டுடன் நடைப்பழகும் அந்த புகைப்படம் இதோ…