ஐந்து வயதில் தனது நடிப்பு திறமையை திரைத்துறையில் காட்டதொடங்கி கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடித்து வரும் பிரபல நடிகை சர்மிளா ராஜேஷ். 90 களில் தமிழ் சினிமாவில் ஒயிலாட்டம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சர்மிளா ராஜேஷ். கிட்டத்தட்ட 80 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்த இவர் ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களில் கொடிகட்டி பறந்த நடிகையாவார். இவர் நடிப்பில் கவனம் பெற்ற படங்களில் உதாரணாமாக சில படங்கள் ‘கிழக்கே வரும் பாட்டு’, ‘நல்லதொரு குடும்பம்’. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்து தனக்கான புகழை தன் நடிப்பு திறமையின் மூலம் உருவாக்கினார். குறிப்பாக இவர் மலையாளத்தில் மிகப்பெரிய புகழை அடைந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கடந்த சில ஆண்டுகளாக நடிகை சர்மிளா குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது கலாட்டா வாய்ஸ் தயாரிப்பில் பிரபல நடிகை ஷகீலா அவர்கள் தொகுத்து வழங்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் நடிகை சர்மிளா கலந்து கொண்டு, தன் திரைப்பயணம், அதில் கடந்து வந்த பாதை மற்றும் எதிர்கால திட்டம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் தமிழ் சினிமாவில் Adjustment என்ற வலையில் சிக்கவில்லையா? அதை செய்யாமல் எப்படி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தீர்? என்ற கேள்விக்கு நடிகை சர்மிளா,
“நான் அதை செய்ததில்லை.. என்னுடைய அப்பாவின் நண்பர்களின் உதவியால் தான் நான் சினிமாத்துறையில் எளிதாக வரமுடிந்தது. பாலாஜி, சிவாஜி கணேசன், நம்பியார் எல்லோரும் அப்போது சிகரங்களாக இருந்தார்கள். அவர்கள் என் அப்பாவின் நண்பர்கள். இவங்களோட பரிந்துரையின் பேரில் சினிமா துறையில் அடியெடுத்து வைக்கும்போது இந்த Adjustment போன்றவற்றிற்கு இடமில்லை. எங்க அப்பா 2003 இறந்து போனபின்பு தான் அந்த வார்த்தை அந்த வழக்கம்லாம் உண்மைனு எனக்கு புரிய வந்தது. நான் இதை தவிர்க்க சாமத்யமாக இருந்தேன். எனக்கு கேரவான் வேண்டாம். எனக்கு வசதியான உணவு வேண்டாம். என்று கூறிவிட்டு ஒரு புதுமுக நடிகைக்கு என்ன சம்பளம் கொடுப்பீர்களோ அதை விட சற்று அதிகமாக கொடுங்கள் என்று சொல்லி எனது வசதியை நானே குறுக்கி கொண்டேன். ஒரு பெரிய பிரபலம் இவ்வளவு எளிமையா நிபந்தனைகள் இல்லாமல் நடிக்க வந்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள் . மேலும் இந்த வயதில் அது போன்ற சங்கடங்கள் வந்ததில்லை" என்று தெரிவித்தார் நடிகை சர்மிளா.
மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் தனது திரை வாழ்கை குறித்தும் நடிகை சர்மிளா பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..