இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மிக பிரமாண்டமாய் உலகமெங்கும் வெளியான திரைப்படம் ‘விடுதலை 1’ . எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிருகதையை தழுவி நேர்த்தியான கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்க இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். இவருடன் படத்தில் மிக முக்கியமான சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பவானி ஸ்ரீ, இயக்குனர் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், இளவரசு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கடந்த மார்ச் 31 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டமான வரவேற்புடன் திரைப்படம் வெற்றிகராமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் சூரி முதல் முறையாக கதாநயாகனாக நடித்திருக்கின்றார். இவரது நடிப்பையும் படத்திற்கு கொடுத்துள்ள உழைப்பும் மக்களிடம் அதிகம் கவனத்தை பெற்று பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூரி முன்னதாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து தற்போது விடுதலை படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றிய மாஸ்டர் பீட்டர் ஹெயின் அவர்களை பாராட்டி தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில்.
“பலர் விடுதலை முதல் பாகம் திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பற்றியும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதுக்கு முழு காரணம் மாஸ்டர் பீட்டர் ஹெயின் மற்றும் அவரின் குழுவினரின் அசாத்திய உழைப்பு தான். நெஞ்சார்ந்த நன்றிகள் “ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.
பலர் #ViduthalaiPart1
— Actor Soori (@sooriofficial) April 7, 2023
திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பற்றியும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதுக்கு முழு காரணம் மாஸ்டர் பீட்டர் ஹெயின் மற்றும் அவரின் குழுவினரின் அசாத்திய உழைப்பு தான். நெஞ்சார்ந்த நன்றிகள் @PeterHeinOffl
@rsinfotainment #Viduthalai #Vetrimaaran pic.twitter.com/dXTijbIfLi
பிரபல ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின் தமிழில் பல படங்களில் ஸ்டன்ட் குழுவில் ஒருவராய் இருந்து மாஸ்டராக வளர்ந்தவர். அதன்படி அவரது முதல் படமாக கௌதம் மேனன் அவர்களின் மின்னலே படம் அமைந்தது. பின் தொடர்ந்து தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றி வந்தார். அதன்படி அந்நியன்,கஜினி, சிவாஜி,எந்திரன், கோ, ஏழாம் அறிவு, மாற்றான், பாகுபலி 1,2, பேட்ட, அசுரன், புஷ்பா போன்ற பல படங்கள் பீட்டர் ஹெயின் மாஸ்டரின் சண்டை காட்சிகள் கவனிக்கப்பட்டு தற்போது தென்னிந்தியாவின் முன்னணி சண்டை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது