9 வருடங்கள் கழித்து மீண்டும் போட்டியா? - துணிவு & வாரிசு ரிலீஸ் குறித்து பதிலளித்த ஷாம்! வைரல் வீடியோ
By Anand S | Galatta | January 10, 2023 22:08 PM IST
தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் "வாரிசு". போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் "துணிவு" . இரண்டு படங்களும் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 11) ரிலீஸாகவுள்ளது.
"துணிவு" படத்தில் அஜித்துடன் இனைந்து மஞ்சு வாரியர் ,யோகி பாபு, சமுத்திரக்கனி , ஜான் கொக்கன் ஆகியோர் நடித்துள்ளனர்."வாரிசு" படத்தில் விஜயுடன் இணைந்து ரஷ்மிக்கா மந்தனா , சரத் குமார் , பிரகாஷ் ராஜ் ஜெயசுதா மற்றும் பலர் நடித்துள்ளனர் . இதில் ஷாம் விஜய்க்கு அண்ணனாக நடித்துள்ளார் . 2014 ஆம் ஆண்டு விஜயின் "ஜில்லா" மற்றும் அஜித்தின் "வீரம்" ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 9 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது. இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் நெருங்கி வருவதை அடுத்து மக்கள் படங்களை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஷாமிடம் பத்திரிக்கையாளர்கள் வாரிசு - துணிவு படங்களின் ரிலீஸ் மற்றும் போட்டி குறித்து கேட்டபோது,
"நான் பார்த்த வரையில் வாரிசு ட்ரைலர் 32 மில்லலின் பார்வையாளர்களை கொண்டுள்ளது. இது பார்வையாளர்கள் பற்றியது அல்ல . இது ஒரு ஆரோக்கியமான போட்டி ஆகும் . அஜித் சாரும் விஜய் அண்ணாவும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக திரைத்துறையில் இருக்கின்றனர் . அவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது . 9 வருடங்கள் கழித்து இருவரின் படங்களும் ரிலீஸாவதால் இப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு ஆரோக்கியமான போட்டி ஆகும்.இரண்டு படங்களுமே சிறப்பாக வெற்றியடைய நான் பிரார்த்திக்கிறேன் .எல்லோரும் படங்களை பார்த்து கொண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
என பதிலளித்துள்ள நடிகர் ஷாமின் அந்த முழு பேட்டி இதோ…