தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் திரைப்பயணத்தில் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வரும் திரைப்படங்கள் முத்து. படையப்பா . காலம் கடந்தும் இந்த படங்கள் ரசிகர்களை அதே அளவில் உற்சாகப் படுத்தி கொண்டே இருக்கிறது. இயக்குனர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் உருவான இப்படங்களில் நடிகராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றியவர் திரைபிரபலம் ரமேஷ் கண்ணா.
நடிகர் ரமேஷ் கண்ணா அவர்களிடம் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பயணித்த அனுபவம் குறித்து நமது கலாட்டா சிறப்பு பேட்டியில் கேட்கப்பட்டது. அதில்
“நான் எங்கு துணை இயக்குனரா வேலை பார்த்தாலும் விவேக்காக ஒரு கதாபாத்திரம் கேட்பேன். அதே மாதிரி விவேக் எங்க போனாலும் ரமேஷ் கண்ணா கதை வெச்சிருக்காரு னு சொல்லுவார். அந்த மாதிரி கேஎஸ் ரவிக்குமார் சார்கிட்ட விவேக் தான் என்னை அறிமுகபடுத்தி வெச்சார். அப்போது என் படம் வெளியில் வரல.. அப்பறம் கே எஸ் ரவிக்குமார் சார் தான் என்னுடன் இணை இயக்குனரா பணியாற்றுங்கள் என்று அழைத்தார். நல்ல மரியாதையையும் சம்பளமும் தரனு சொன்னார். நல்ல சம்பளம் கொடுத்தார் மரியாதை தான் கொடுக்கல.. அடி அந்த மாதிரி இருக்கும்.” என்று சிரித்தார். மேலும்
“முதலில் வசனம் எழுதிடுவோம். படப்பிடிப்பில் அந்த காட்சி குறித்து பேசுவோம். உதாரணமாக படையப்பா படத்தில் 'ஆட்சி அவங்க பக்கம் இருக்கலாம் ஆண்டவனே நம்ப பக்கம்' னு வசனலாம் ரஜினி சார் தான் சொன்னதே. அதுவும் ஸ்பாட்ல வந்தது. முத்து படத்தில் தும்பல், இருமல் னு ஒரு வசனம் வரும் அதுவும் அவர்தான் சொன்னது. அதே படத்தில் 'எப்போ வருவன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது. வரவேண்டிய நேரத்தில் கரக்ட்டா வருவேன்' ன்ற வசனம் நானும் ரவிக்குமார் சாரும் எழுதுனோம். அப்போ அந்த வசனம் மிகப்பெரிய பிரபலமானது.
அதே மாதிரி கோச்சடையான் படத்தில், ராணாவை சிறையில் அடைத்ததும் நாசரிடம் ஒரு வசனம் வரும் 'நீ தப்பிக்க வாய்பே கிடையாது' னு அந்த வசனம் படப்பிடிப்பில் பேசும் போது அப்போ நான் சொன்னேன் 'வாய்புகள் அமையாது நாம்தான் அமைத்து கொள்ள வேண்டும் ' என்றேன். உடனே ரஜினி சார் நல்லாருக்குனு சொல்லி வெச்சாரு.. அப்பறம் அடுத்த வசனம் 'சூரியனே என்னை பார்த்து தான் எழும் விழும் ' னு ஒரு வசனம் கொடுத்தேன். உடனே ரஜினி சார் 'எதுக்கு இது?' என்றார். நான் தமிழ் மண் வசனம் னு என்னமோ சொன்னேன் உடனே அவர் 'சூரியன் லாம் நம்ம டச் பண்ண வேண்டாம்' னு சொல்லிட்டாரு அடுத்த வசனம் 'ரத்தத்தின் ரத்தம் ' னு சொன்னேன். அதுக்கும் ரஜினி சார் பேசமாட்டேன் னு சொல்லிட்டார். நான் பேசி ஆக வேண்டும் என்று சொன்னேன். 30 நிமிடம் ரெண்டு பேருக்கும் வாக்குவாதமா போச்சு..
முத்து படத்துல வர வசனத்திற்கு இன்னிக்கு வரைக்கும் பிரச்சனைய பார்த்துட்டு வரேன். இதெல்லாம் நான் பேச மாட்டேன் னு ரஜினி சார் சொல்லிட்டாரு. அப்பறம் சௌந்தர்யா மேடம் வந்து சொல்லியும் கேட்கல..” என்றார். ரமேஷ் கண்ணா.
மேலும் படையப்பா படம் குறித்து பேசுகையில்,
படையப்பா படத்தில் சிவாஜி சாருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார். சிவாஜி சார் ஷாக் ஆகிட்டு 'இவ்ளே சம்பளம் எனக்கு யாரும் கொடுத்ததில்லையே' என்றார். பெரிய கலைஞனை ரஜினி சார் இப்படி கௌரவிப்பது பெரிய விஷயம் ல.. அதே மாதிரி ரம்யா கிருஷ்ணனுக்கு அற்புதமான வில்லி கதாபாத்திரத்திரத்தை பரிந்துரைத்தார். இன்னிக்கு வரைக்கும் நீலாம்பரி பற்றி பேசிட்டு இருக்காங்க.. படையப்பா ஒரு காட்சியில் நான் செந்தில் மற்றவரெல்லாம். அப்போ ரஜினி சார் வந்து என்னது னு கேட்பார் நாங்கள் மறைப்போம். உடனே ரஜினி வாங்கி குடித்தார். எந்த கலைஞனும் இதை செய்ய யோசிப்பார். வேறு யாராவது இருந்தால் ஷாட் கட் பண்ணி கிளாஸ் கழுவி திருப்பவும் எடுத்திருப்பார்கள்.
மேலும், ரவிக்குமார் சார் ரஜினி சார் டான்ஸ் ஆடி முடிச்சதும் ரஜினி சார் கண் காட்டுனார். நான் உடனே ஒன்மோர் என்றேன். ஏன் என்று ரவி சார் கேட்டார். நான் ஸ்டெப் மிஸ் ஆயிடுச்சு னு சொன்னேன். உடனே கொஞ்சம் வாக்குவாதம் ஆக.. உடனே ரஜினி சார் 'இப்போ ரமேஷ் கண்ணா தான் இயக்குனர் அவர் சொல்றத நீ செஞ்சிதான் ஆகனும்' என்றார். திரும்பவும் அவங்க ஆடுனாரு.. " என்றார்.
மேலும் இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா நமது கலாட்டா சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..