தளபதி விஜயின் லியோ படத்தில் இணையும் பிரபல நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அட்டகாசமான தகவல் இதோ..

லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர் -  Joju George joins thalapathy vijay leo movie | Galatta

இந்திய சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பான் இந்திய திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோரோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை திரிஷா நீண்ட நாளுக்கு பின் விஜயுடன் இப்படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்திற்கு பின் கூட்டணி அமைத்திருக்கும் விஜய் லோகேசஷ் கனகராஜின் லியோ படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவிருக்கிறார். மேலும் அன்பறிவு சகோதரர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.

கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய லியோ படக்குழு இந்த ஆண்டு துவக்கத்தில் காஷ்மீர் பகுதிகளை தொடங்கியது. காஷ்மீர் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது சென்னையில் படபிடிப்பை நடத்தி வருகின்றனர். விரைவில் படக்குழு ஹைதராபாத் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் தளபதி விஜயின் 67 வது படமான லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மிக பிரபலமான இவர்  தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்திலும் வைபவ் நடிப்பில் வெளியான ‘பப்பூன்’ படத்திலும் நடித்துள்ளார்.

மலையாள திரையுலகில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்தியா முழுவதும் தனக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.ஏற்கனவே லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் இணைந்துள்ளதையடுத்து தற்போது ஜோஜூ இணையவுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. ஆனால் இன்னும் படக்குழுவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 “விடுதலை படத்தினால் பத்து தல படத்தின் வசூல் பாதிக்கவில்லை” தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பகிர்ந்த தகவல் – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“விடுதலை படத்தினால் பத்து தல படத்தின் வசூல் பாதிக்கவில்லை” தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பகிர்ந்த தகவல் – முழு நேர்காணல் இதோ..

சினிமா

"பயங்கர மாஸான படமா இருக்கும்!"- வெற்றிமாறன்-சூர்யாவின் வாடிவாசல் குறித்த அதிரடி அப்டேட் கொடுத்த Rவேல்ராஜ்! வைரல் வீடியோ

சினிமா

"அந்த காட்சி 'Wow' அப்படி இருந்தது" - இயக்குனர் ராஜீவ் மேனன் விடுதலை படம் குறித்து பகிர்ந்த தகவல்- முழு வீடியோ இதோ...