இறைவனடி சேர்ந்தார் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் !
By Aravind Selvam | Galatta | April 30, 2021 11:23 AM IST
பத்திரிகைகளில் கேமராமேன் ஆக இருந்து சினிமாவில் கடின உழைப்பால் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக பெயர் எடுத்தவர் கே.வி.ஆனந்த்.ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அசத்தியிருந்தார் கே.வி.ஆனந்த்.தமிழில் காதல் தேசம் படத்தில் அறிமுகமான கே.வி.ஆனந்த் தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே,சிவாஜி உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனராகவும் தனது தடத்தை பதித்தார் கே.வி.ஆனந்த்.தொடர்ந்து அயன் ,கோ,அனேகன்,மாற்றான்,காப்பான் என்று பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் கே.வி.ஆனந்த்.
ரசிகர்களின் ரசனை அறிந்து மசாலாவுடன் தனக்கு தெரிந்த கருத்தை ரசிகர்களுக்கு சொல்லும் இவரது வித்தியாசமான படங்கள் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார் என்ற சோகமான மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளியானது.
மாரடைப்பு காரணமாக இறந்ததாக கூறப்படும் கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதற்காக அவர் கடந்த 20 ஆம் தேதி அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதும் தெரியவந்துள்ளது.மேலும் கே.வி.ஆனந்தின் மனைவிக்கும் அவரது மகள்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு குணமடைந்ததும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கே.வி.ஆனந்த் காலமாகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.இவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cook with Comali star Ashwin's new music video | Loner Official Teaser
30/04/2021 02:00 PM
Director KV Anand's real cause of death revealed - mortal remains cremated!
30/04/2021 01:00 PM