"சிவகார்த்திகேயனோடு படம் பண்றீங்களா..?"- ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்!-  வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ!

சிவகார்த்திகேயனோடு இணைவது குறித்து பேசிய ARமுருகதாஸ்,A r murugadoss confirms his movie with sivakarthikeyan | Galatta

பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற தவறியது. இதனை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. முன்னதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16ஆகஸ்ட் 1947 திரைப்படம் வருகிற ஏப்ரல் 7ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "இப்போது நீங்கள் சிவகார்த்திகேயனோடு படம் பண்றீங்களா?" என கேட்டபோது, “ஆமாம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது” என தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம், “இப்போது அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் ஒரு கதை ஹீரோவுக்காக அமைப்பீர்களா? அல்லது என்னிடம் ஒரு கதை இருக்கிறது அதில் சிவகார்த்திகேயனை கொண்டு வருகிறேன் அந்த மாதிரி பார்ப்பீர்களா?” எனக் கேட்டபோது, “பொதுவாக இரண்டு மூன்று அவுட் லைன்கள் இருக்கும். யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் துப்பாக்கி திரைப்படமே நான் விஜய் சாருக்காக செய்தது கிடையாது. அது ஏன் ஒட்டுமொத்தமாக அவருக்கு புதிதாக இருந்தது என்றால், அது ஒரு காரணம்!. நான் முன்னாள் ஒரு ஹீரோவுக்காக செய்தேன் பின்னர் ஹிந்தியில் அக்ஷய்குமார் சாரிடம் சொல்லி சம்மதம் பெற்று அவருடைய தேதிகளையும் பெற்றுவிட்டேன். அவருடைய தேதிகள் கொஞ்சம் தாமதமாவதால் இங்கு வந்து அதை செய்தேன். எனவே அப்படி ஒவ்வொரு ஹீரோவையும் நினைத்து வரும்போது அவர்களது இமேஜை வைத்து செய்வது கிடையாது. சில சமயம் அப்படியும் நடக்கும். சில நேரங்களில் அடுத்து நாம் ஒரு காம்பினேஷனில் செய்யலாம் சிவகார்த்திகேயனோடு ஒரு படம் செய்யலாம் என்று முடிவு செய்தால், இதற்கு முன்னால் எப்போதோ ஒரு தடவை ஒரு அவுட்லைன் இருந்திருக்கும், அந்த அவுட்லைன் ஷாருக்கானுக்கு செய்யலாம் என இருந்திருக்கும். இந்த உடல் மொழி சில பேருக்கு இருக்கும் இதை இவர்களுக்கு கொடுக்கலாம் என்று… அதே சமயம், ஒரு ஹீரோவுக்கு செய்ய வேண்டும் என்பதற்காகவும் நாம் செய்வது உண்டு. உதாரணத்திற்கு கத்தி திரைப்படம் செய்யும் போது என்னிடம் எதுவும் இல்லை. விஜய் சாருக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என இருந்தபோது அன்றைக்கு இருந்த ஒரு விஷயத்தை வைத்து ஒன்றை முன்னெடுக்கலாம் என விஜய் சாரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது அதிலிருந்து விரிவு படுத்தினேன். இதில் விஜய் சாரின் ரசிகர்களுக்கு என்ன இருக்கும், ஒருபுறம் ஒரு கேரக்டர் கொஞ்சம் வறட்சியாக இருக்கும் போது மறுபுறம் இன்னொரு கேரக்டர் வழக்கமாக ரசிகர்களுக்கான கேரக்டராக இருந்தால் நன்றாக இருக்கும். அந்த கேரக்டர் வறட்சிக்கு வரும்போது சலிப்பு இல்லாமல் படத்தை பார்ப்பான். இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக இது ஒரு போர் படம் என நினைத்து விடுவான். அப்படி சில நேரங்களில் ஹீரோவுக்காகவும் படம் பண்ணுவது உண்டு.” என பதில் அளித்துள்ளார். எனவே வெகு விரைவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் ஏ.ஆர்.முருகதாஸின் அந்த சிறப்பு பேட்டி இதோ…
 

வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 எப்படி இருக்கும்?- எதிர்பார்ப்புகளை தூண்டிய முக்கிய நடிகரின் சுவாரசியமான பதில்! வைரல் வீடியோ
சினிமா

வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 எப்படி இருக்கும்?- எதிர்பார்ப்புகளை தூண்டிய முக்கிய நடிகரின் சுவாரசியமான பதில்! வைரல் வீடியோ

ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக வந்த ரியல் வாத்தியார்... சூரியின் பள்ளி பருவ அட்டகாசங்களை பகிர்ந்த கலக்கலான வீடியோ இதோ!
சினிமா

ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக வந்த ரியல் வாத்தியார்... சூரியின் பள்ளி பருவ அட்டகாசங்களை பகிர்ந்த கலக்கலான வீடியோ இதோ!

முதல் முறையாக தன் குழந்தைகளின் முழு பெயரை அறிவித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

முதல் முறையாக தன் குழந்தைகளின் முழு பெயரை அறிவித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!