போதையில் சாலையின் நடுவே பட்டாசு வெடித்து ரகளை செய்ததை தட்டி கேட்ட காவல் ஆய்வாளர் மீது பட்டாசு தூக்கிப்போட்ட இளைஞர்கள் 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறங்கண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு எதிரே,  தீபாவளியன்று இரவு திருக்கோவிலூர், விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்திய 5 பேர் கொண்ட கும்பல், நேற்று முன்தினம் பட்டாசு வெடித்தும் கூச்சலிடும்  இருக்கிறார்கள் . இதனைக்கண்ட உதவி ஆய்வாளர் டார்ஜான் (வயது 55) வாலிபர்களை எச்சரித்து இருக்கிறார்.


மேலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசை வெடிக்குமாறும், இல்லாத பட்சத்தில் கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அக்கும்பல் காவல் உதவி ஆய்வாளரின் மீது பட்டாசை கொளுத்தி வீசியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட அதிகாரி விலகியதால், காயமின்றி  தப்பினார்.

பட்டாசை வீசிய இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல அதிகாரி முற்பட்ட போது, அந்த கும்பல் காவல் உதவி ஆய்வாளர் டார்சானை தாக்கி இருக்கிறது. இதனைக்கண்ட சக காவலர்களாக பயிற்சி துணை ஆணையர் நமச்சிவாயம், உதவி ஆய்வாளர் புனிதவல்லி மற்றும் காவலர்கள் 4 இளைஞர்களை மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டார்.

போலீசார் நடத்திய  விசாரணையில் அறங்கண்டநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்த ஆகாஷ் (வயது 19), விக்னேஷ் (வயது 27), சோமு (வயது 35), ஷாநவாஸ் (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஹரிதரனை தேடி வருகின்றனர்.