கோவையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியும், கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி அரசுப் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 11-ம் தேதி, பெற்றோர் வெளியே சென்றிருந்தநிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பின்பு நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி  11-ம் வகுப்பு படித்து வந்த தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு, பின்பு 12-ம் வகுப்பு மாநகராட்சி அரசுப் பள்ளியில் சேர்ந்தது தெரியவந்தது. 

மேலும் தனியார் பள்ளியை விட்டு வெளியேறினாலும், இயற்பியல் ஆசிரியர் மிதுனின் பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. பல அரசியல் தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.

k1

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வருத்தம் தெரிவித்திருந்தனர். குற்றாவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.  மேலும்  மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர் மிதுன் மற்றும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் இருவரையும் கைதுசெய்யும்வரை மாணவியின் உடலை பெற மாட்டோம் என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாணவியின் சக நண்பர்கள் என பலரும் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தை அடுத்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்கு செய்தனர். 

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுனின் மனைவியுடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், மிதுனின் மனைவி “என்ன வந்து சிஸ்டர் ஆ நினைச்சுக்கோ... யார் மேல தப்பு இருந்தாலும்... தைரியமா அதாவது உண்மையா என்ன நடந்ததுனு தைரியமா சொல்லு...” என்று மாணவியிடம் கேட்கிறார்.

அதற்கு மாணவி “யார்கிட்டயாவது சொல்லணும்… இல்லனா எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் மிஸ்… ஆடிட்டோரியம் ஸ்டெப்ல மேம்” என்று சொல்கிறார். “முன்னாடியே என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே… இல்லனா மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்ல வேண்டியதுதானே…” இவ்வாறு மிதுனின் மனைவி பேசுகிறார்.

k2

மேலும், “புராஜெக்ட்க்கு உன்னையும் உன் பிரண்ட்ஸையும் நான் வர சொன்னேன்.. புராஜெக்ட்க்கு உனக்கு உதவியும் செய்தேன்.. அவ்வளவுதான்.. அதுக்கப்பறம் உன்னை வர சொல்லவே இல்லையே.. நீ எதுக்கு மறுபடியும் இங்கே வந்தே? நீ படிக்கிற பெண்தானே?... தைரியமாக இரு.. தப்பாக நடந்துக்கிறவங்களை ஓங்கி அறை விட வேண்டியதுதானே?.. நம்மை நாமதான் பார்த்துக்கணும்.." என்று மிதுன் மனைவி கூறுகிறார்.

அதற்கு மாணவி, "பயமா இருந்தது மிஸ்.. சாரை எப்படி நான் அறைய முடியும்? இதைத்தான் மிதுன் சாரும் சொல்றாரு... நான் என்ன தப்பு செய்தேன்" என்று கேட்க, "இது சாதாரண விஷயம் இல்லை.. ரொம்ப பெரிய விஷயம்.. மீரா மேடம்கிட்ட கொண்டு போகலாம்.. நீ எதுக்கு அத்தனை மெசேஜ் அவருக்கு பண்ணே? எதுக்கு மிதுனுக்கு அடிக்கடி Hi.. Hi..ன்னு மெசேஜ் செய்றே.. ஒரு சாருக்கு இப்படி மெசேஜ் செய்றது சரியா? என்று மிதுனின் மனைவி கேட்கிறார். 

"கிளாசுக்கு வராமல் ஏன் லீவு போடுறே?னு கேட்டானா இல்லையா… வீட்டில் ஏதோ சண்டைன்னு சொன்னே.. அப்போகூட கிளாஸை அட்டண்ட் பண்ணுன்னு நான் சொன்னேன் இல்லை? ஆனால், இந்த விஷயத்துல அவரை தப்பிக்க வெக்கணும்னு நினைக்கலே.. நானும் ஒரு பெண்தான்.. யார் தப்பு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய முடிவு.. 

அது என் கணவராக இருந்தாலும் தப்பு தப்பு தான்.. நீ ஒன்னு சொல்றே.. அவர் ஒன்னு சொல்றாரு.. உங்களை நேருக்கு நேர் வெச்சி கேட்டால்தான் யார் சொல்றது உண்மைன்னு தெரியவரும்.. ” இவ்வாறு அந்த உரையாடல் இருக்கிறது.

“சரிம்மா நான் மிதுனை கண்டிக்கிறேன். நீ தைரியமா, நிம்மதியா படிக்கிற வழியா பாரு”... இவ்வாறு ஆறுதல் சொல்லாமல், மிதுன் மீது தப்பு இருந்தாலும் தப்பு, தப்புதான் என்று கூறிவிட்டு மாணவியை அதட்டும் தொனியில் மிதுனின் மனைவி அந்த செல்ஃபோன் உரையாடலில் பேசியிருப்பது போன்று உள்ளது.

மாணவி மற்றும் ஆசிரியர் மிதுனின் மனைவி பேசுவது தொடர்பான ஆடியோ குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.