தீபாவளி பட்டாசு வெடிப்பதில் விதி மீறல் -2000 வழக்குகள் பதிவு
சென்னையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த 891 பேர் மீது வழக்கு
விதிகளை மீறிய பட்டாசு கடைகள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது
சுப்ரீம் கோர்ட் வரையறுத்த நேரத்தை மீறி தீபாவளி பண்டிகையை அன்று சென்னையில் பட்டாசு வெடித்த 891 மீது போலீசார் வழக்கு பதிவு செய்துளனர்.விதிகளை மீறி செயல் பட்ட பட்டாசு கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையன்று சுற்று சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் பட்டாசுக்களை வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு நேரம் ப்ரோயறுத்தது.இந்த உத்தரவு கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7மணிவரை ஒரு மணி நேரமும் இரவு 7மணி முதல் 8மணி வரை ஒரு மணி நேரமும் என 2மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளித்தது.
பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாட்டை கடை பிடிக்காதவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் தீபாவளியன்று சென்னை போலீஸ் கமிஷ்னர் ஷங்கர் திவால் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனெர்கள்,இணை கமிஷனெர்கள், துணை கமிஷனெர்கள் அறிவுரையின் பேரில் உதவி கமிஷனெர்கள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு,
ரோந்து பணியில் ஈடுபட்டுயிருந்தனர். இதன் மூலம் கோர்ட் வரையறுத்த நேரத்தை கடந்து பட்டசுகள் வெடித்தவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்னையில் 891 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு 428 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுயிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு கடைகள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு மற்றும் போலிஸ்துறையிடம் அனுமதி பெறவேண்டும். தமிழக அரசு விதிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பட்டாசு கடைகளில் கடைபிடிக்கப்படவேண்டும் இந்த நிலையில் சென்னையில் போலீசார் நடத்திய கண்காணிப்பின் போது தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடைகள் நடத்தியது தொடர்பாக 250 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி தீபாவளியன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2ஆயிரம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகவும், இதில் 1200 பேர் கைது செய்யப்பட்டு உடனடியா ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.