நடிகை வனிதாவால் அநாதையான சூரிய தேவியின் 2 பிள்ளைகள்! வனிதாவை ஆதரிக்கும் போலீஸ்..
By Aruvi | Galatta | Jul 23, 2020, 12:30 pm
நடிகை வனிதாவின் புகாரின் பேரில் சூரிய தேவி கைது செய்யப்பட்டுள்ளதால், அவருடைய 2 பிள்ளைகளும் தற்போது அநாதையாகி உள்ளதாகவும், வனிதாவை ஆதரிக்கும் நோக்கத்துடன் வடபழனி போலீசார் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நடிகை வனிதா - சூர்யா தேவி பிரச்சனையைத் தமிழ்நாடே கடந்த ஒரு மாத காலமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. நடிகை வனிதா - சூர்யா தேவி சண்டையால், தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்ட கொரோனா வைரஸ் மற்றும் சாத்தான்குளம் லாக்கப் டெத் உள்ளிட்ட பிரச்சனைகளை மறந்து, தமிழக மக்கள் பலரும் வனிதா பிரச்சனையிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த வாரம் நடிகை வனிதா - சூர்யா தேவி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்த சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இருவரையும் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இருவரும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாக கூறியதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, இருவரும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வீடியோவிலேயே சண்டை போட்டு வந்தனர். அத்துடன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி ஆகியோரிடமும் நடிகை வனிதா வீடியோவில் அவதூறு பேசி, “போடி.. வாடி.. இவளே.. அவளே..” என்றெல்லாம் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், நடிகை வனிதாவின் புகாரின் பேரில் சூரிய தேவி கைது செய்யப்பட்டுள்ளதால், அவருடைய 2 பிள்ளைகளும் தற்போது அநாதையாகி உள்ளதாக, சூரிய தேவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மது என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அந்த வீடியோவில் பேசிய உள்ள மது, “ சூரிய தேவியின் 2 பிள்ளைகளையும் வீடியோவில் அறிமுகம் படுத்துகிறார். அதன்படி, சுமார் 10 வயது மதிக்கத்தக்க சூரிய தேவியின் மகள் பேசுகிறார். அதில், நேற்று மாலை 6 மணி அளவில் 3 போலீசார்காரர்கள் வந்து அம்மாவை அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார்.
அத்துடன், “ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவதாக அம்மா கூறியதாகவும்; ஆனால், இதுவரை வரவில்லை என்றும், இன்னும் நாங்கள் சாப்பிடவில்லை” என்றும், அந்த குழந்தைகள் இருவரும் அப்பாவியாகக் கூறுகிறார்கள்.
இதனையடுத்து, அந்த வீடியோவில் பேசும் மது, “ சூரிய தேவி நைட் ஒரு மணிக்கு எனக்கு போன் பண்ணி, என் பசங்க நைட் சாப்பிடாமல் இருக்காங்க.. அவுங்க நீ போய் பாத்துக்கோ. என்னை போலீசார் விசாரணை என்ற பெயரில் வடபழனி காவல் நிலையம் அழைத்து வந்திருக்கிறார்கள்” என்று கூறியதாகச் சொன்னார்.
“அதன்படி, நான் வடபழனி காவல் நிலையம் சென்று பார்த்தபோது, அங்கப் பார்த்த ஒரு 4,5 கார் இருக்கு. அத்தனை பேரு நிக்குறாங்க. அங்கு அத்தனை பேருகிட்டேயும் சூரிய தேவி மட்டும் தனி ஆளாக போராடிக்கிட்டு இருக்கிறாள். சூரிய தேவிக்கு வழக்கறிஞர் என்று யாருமே இல்லாமல் தனியாக நிற்கிறாள்.
அப்போது, அவள் வீட்டு சாவியை நான் வாங்கியபோது, சூரிய தேவியின் செல்போனை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டதாகவும்” கூறினார்.
குறிப்பாக, “என்னை விசாரணை என்ற பெயரில் கூட்டி வந்து, என்னைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்போவதாகவும் போலீசார் மிரட்டுவதாகவும், போலீசார் முழுக்க முழுக்க வனிதாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும்” சூரிய தேவி கூறியதாக மது தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, வனிதா போலீசார் முன்னிலையில் என்னை செருப்பால் அடிக்க வந்தார் என்றும், ஆனால் என்னிடம் போன் இருந்தாலாவது நான் போன் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவைக் கேட்டிருப்பேன். ஆனால், என் போனை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுத்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டியதாகவும்” மது கூறுகிறார்.
மேலும், சூரிய தேவியின் 2 பசங்களையும், என்னால் ஒரு நாள், 2 நாள் பார்த்துக்கொள்ள முடியும். அதன் பிறகு அவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள். போலீசார் முறைப்படி வந்து கைது செய்யும் போது, அவரின் 2 குழந்தைகளை என்ன செய்யலாம் என்று யோசித்து அதன் படி செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், விசாரணை என்ற பெயரில் சூரிய தேவியை அழைத்துச் சென்று, அதன் பிறகு அவரை கைது செய்தால், சூரிய தேவியின் 2 குழந்தைகளும் தற்போது அநாதையாக நிற்கிறார்கள் என்றும், அவர்களை சாப்பிடச் சொன்னால் கூட சாப்பிட மறுக்கிறார்கள் என்றும், எங்களுக்கு அம்மா வேண்டும் என்று அடம் பிடிப்பதாகவும்” வேதனையோடு மது அந்த விடியோவில் பேசியிருக்கிறார்.
தற்போது, சூரிய தேவி குறித்து மது பேசி வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அத்துடன், சூரிய தேவிக்கு கொரோனா இருக்கிறதா என்ற பரிசோதனை நடத்த போலீசார் அழைத்துச் சென்றிருப்பதாகவும், போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“சாத்தான்குளம் லாக்கப் டெத் விசயத்தில் தான் போலீசாருககு இறக்கம் இல்லை என்றால், சூரிய தேவியின் 2 பச்சிளம் குழந்தைகள் மீதும் போலீஸ்சாருக்கு இறக்கம் வரவில்லையா?
சூரிய தேவியின் 2 குழந்தைகளும் அநாதையாக்கப்பட்டதால், அந்த பாவமும் போலீசாரின் பொக்கிஷ கணக்கில் வந்து சேர்ந்துகொள்ளும் என்பது மட்டும் நிச்சம்.
போலீசாரின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் தமிழக மக்கள் தற்போது கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.