காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை ஓ பன்னீர்செல்வம் பார்வையிட்டு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை.

PANEER தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவந்தது . கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும்  பல்வேறு கட்சித் தலைவர்களும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டனர்.


இந்நிலையில் சென்னை  காசிமேட்டில் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு  பின்னர் மீனவப் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் செய்தியாளர், எடப்பாடி பழனிச்சாமியும் நீங்களும் தனித்தனியாக நிவாரண பொருட்க்களை  வழங்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்தித்து  பேசிய அவர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நானும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது  என்ற கேள்விக்கு,  எங்களுக்குள் எந்த விதமான பாகுபாடும் இல்லை எனவும்  பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம். உங்களது பார்வையில் தான் தவறு உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாவது நாளாக மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தி.நகர், அண்ணாநகர், எழும்பூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்  வழங்கினார். அதில் கனமழை, அதிக காற்று காரணமாக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால்  பொதுமக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளார்கள் எனவே  தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி அவர்களுக்கான இழப்பீடை தர வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

இதனையடுத்து  அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என மீண்டும் முதலமைச்சர் கேள்விக்கு பதில் என்ன என்ற செய்தியாளர் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.