கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் பின்னடைவு!
By Aruvi | Galatta | May 02, 2021, 07:30 pm
கோவை தெற்கு தொகுதியில் திடீர் திருப்பமாக நடிகர் கமல்ஹாசன் திடீரென்று பின்னடைவை சந்தித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் காலை முதல் அதாவது முதல் சுற்று முதல் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தின் பிற தொகுதிகளில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்களை தேர்தல் அதிகாரிகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், 23 வது சுற்றில், அவர் எதிர்பாரத விதமாக திடீரென்று பின்னடைவை சந்தித்து உள்ளார்.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியானது, கமல் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே காலை முதல் முன்னிலை வகித்து வந்தது.
இந்த நிலையில் தான், 23 வது சுற்றில் கமல்ஹாசனை விட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 890 வாக்குகள் கூடுதலாக பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் அடுத்த சுற்றில், மீண்டும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அதே போல், தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி கட்சிகளானது 156 தொகுதிகள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
அதே போல், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளானது 78 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
இதனிடையே, கடந்த 1996 ஆம் ஆண்டிற்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.