சூர்யா தரப்பில் இருந்து அவர்களது பதிலை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார்.

kbaluஜெய் பீம் பட சர்ச்சையால் நடிகர் சூர்யாவை வன்னியர் இன மக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் வன்னியர் மக்களை இழிவு படுத்தும் விதமாக ஜெய் பீம் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் வன்னியர்களின் மனம் புண்பட்டுவிட்டது என்றும் ரு.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும்  தெரிவித்தார். 

இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ்க்கு  நடிகர் சூர்யா பதில் அறிக்கையாக எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத  யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதியாகத்தான் நடந்து கொல்கிறாரகள் இதில் சாதி இன் மதம் மொழி பேதம் இல்லை இதற்கு உலகம் முழுவதும் சான்று உள்ளது எனவும் படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கியே எழுப்பிய  கேள்வியை குறிப்பிட்ட அரசியலுக்குள் சுருக்கவேண்டாம். அநீதிக்கு எதிரான போராட்ட குரல் பெயர் அரசியலால் நீர்த்து போகிறது என்றும் சகமனிதனின் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தருகிறேன் சமத்துவம் சகோதரத்துவம் பெறுக அவரவர் வழியில் தொடர்ந்து செயல் படுவோம் என்று புரிதலுக்கு நன்றி என சூர்யா அவர் அறிக்கையில் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றதில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது :
ஜெய் பீம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும் எனவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டியும் மேலும் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதற்காக ரூபாய் 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நடிகர் சூர்யாவிற்கு வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார் .

மேலும் நடிகர் சூர்யாவின் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் ஜெய் பீம்  திரைப்படத்தால் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். நீதிமன்ற வழக்கில் வரக்கூடிய இழப்பீட்டு தொகை முழுவதையும் இந்த பிரச்சினையில் உண்மையில் பாதிக்கப்பட்ட பார்வதி அவருடைய குடும்பத்தினர் வாரிசுகளுக்கு வழங்கப்படும் என பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார்.

இந்நிலையில் வன்னியர் சங்கத்தின் உணர்வுகளை சூர்யா மற்றும் திரைப்பட இயக்குனர்கள் புரிந்துகொள்ளவில்லை எனவும், மேலும் சூர்யா தரப்பில் இருந்து அவர்களது பதிலை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார்.