நடிகர் விஜய் வாக்களித்தபோது நடந்தது என்ன? “மன்னிப்பு” கேட்டது ஏன்? காரணம் இது தான்!
சென்னை நிலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தபோது, “மன்னிப்பு” கேட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் படி, இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்த பொது மக்கள், மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இவர்களுடன், சினிமா பிரபலங்களும் ஓட்டு போட வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் தான், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் விஜய், கருப்பு கலர் மாஸ்க் உடன், சிவப்பு நிற காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் விஜய், தனது காரில் இருந்து இறங்கி, வாக்கு செலுத்த நடந்து வரும்போது, அவரை சுற்றி ஏராளமான ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, நடிகர் விஜயை போட்டோ எடுக்கவும், வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடிய நிலையில், நடிகர் விஜயின் அருகில் நின்ற ஒரு செய்தியாளர்கள் நிலை தடுமாறி எதிர்பாரத விதமாக கீழே விழுந்தார்.
அப்போது, கீழே விழுந்த செய்தியாளரை, நடிகர் விஜய் தனது கையை கொடுத்து, அவரை மேலே தூக்கி விட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துடன், நடிகர் விஜய் வாக்கு செலுத்த அந்த வாக்குச்சாவடிக்குள் சென்ற போது, அங்கு பெரிய அளவில் கூட்டம் எதுவும் இல்லாத நிலையில், 3 பேர் மட்டுமே வாக்கு செலுத்த காத்திருந்தனர்.
ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் அதிக அளவில் திரண்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அங்கிருந்த 2, 3 வாக்காளர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு, பத்திரிகையாளர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், நடிகர் விஜயை அதிகாரிகள் உனடியாக வாக்கு செலுத்த அனுமதித்தனர்.
அதன்படி, நடிகர் விஜய் வாக்கு செலுத்த அந்த பூத்தின் உள்ளே சென்று வாக்களிக்க முயன்ற போது, சில செய்தியாளர்கள் அங்கு சென்று, நடிகர் விஜய் வாக்களிப்பதை வீடியோ எடுக்க முயன்றனர். இதனை கண நேரத்தில் கவனித்த நடிகர் விஜய், அவர்களை பின்னாள் தள்ளிப் போக சொன்னார். ஆனால், அவர்கள் உடனடியாக அங்கிரந்து நகரவில்லை என்பதால், நடிகர் விஜய், வாக்களிக்காமல் அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தார்.
இதனையடுத்து, அங்கு நின்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள், செய்தியாளர்களின் கூட்டத்தை அங்கிருந்து விலகிப்போக சொன்ன நிலையில், அனைவரும் சற்று பின் வாங்கி வெளியே வந்தனர்.
இதனையடுத்து, நடிகர் விஜய், மீண்டும் பூத் உள்ளே சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதனையடுத்து, வாக்களித்து விட்டு நடிகர் விஜய், தனது காரில் ஏரி வீட்டிறகு புறப்பட்டுச் சென்ற அடுத்த சிறுது நேரத்தில், நடிகர் விஜய், “மன்னிப்பு கேட்டார்” என்கிற செய்திகள் பரவியது.
இது குறித்து அங்கு இருந்த நமது செய்தியாளர் முத்துகுமரனிடம் கேட்டபோது, “நடிகர் விஜய், வாக்கு செலுத்த வந்த போது அங்கு ஏற்பட்ட பத்திரிகையாளர்களின் கூட்ட நெரிசல் காரணமாக, அங்கு நின்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி, நடிகர் விஜய் முன்பு வந்ததால், அந்த பாட்டியிடம் நடிகர் விஜய், “வணக்கம் சொன்னபடி, சாரி” என்று கூறியதாக தெரிகிறது.
அதாவது, அந்த மூதாட்டியை அந்த கூட்ட நெரிசலில் இடித்துவிட கூடாது என்கிற ரீதியில், அந்த பாட்டிக்கு வணக்கம் வைத்தபடியே, நடிகர் விஜய், “சாரி” என்று சொன்னார் என்றும், கூறப்படுகிறது.
ஆனால், இதனை அங்கிருந்த சிலர் இதனை தவறாக புரிந்துகொண்டு, “நடிகர் விஜய், மன்னிப்பு கேட்டார்” என்று, கூறியதாகவும், இதனால் இது குறித்து வதந்தி பரவியதாகவும் தகவல்கள் வெளியாகி, விஜய் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் தான், “நடிகர் விஜய், மன்னிப்பு கேட்டார்” என்கிற வதந்திக்கு தற்போது முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.