உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் பற்றிய முக்கிய பின்னணி தகவல்கள்!
உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் பற்றிய முக்கியமான சில பின்னணி தகவல்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் போர் நடந்துக்கொண்டு இருக்கிறது.
அதன் படி, இன்றுடன் கிட்டதட்ட 13 வது நாளாக இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனில் நடக்கும் இந்த போரைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் கிட்டதட்ட 17 லட்சம் பேர் அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருவதாகவும் ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.
அதே நேரத்தில், உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வரும் மற்றும் வேலை பார்த்து வரும் இந்தியர்களை மீட்பதற்காகவும், முதல் நாள் மதல் அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு சென்ற இந்தியர்களை மீட்பதற்காகவும், நமது மத்திய அரசு “ஆபரேஷன் கங்கா” திட்டத்தின் மூலமாக அதிரடியாக மீட்டு வருகின்றனர்.
இவற்றுடன், உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக, தமிழக அரசு தனியாக குழு ஒன்றை அமைத்து, அதற்காக நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனையடுத்து, தமிழக அரசின் குழுவினர் நேரடியாக உக்ரைன் நாட்டிற்கே சென்று, அங்குள்ள தமிழக மாணவர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை தீவிரமாக மீட்டு வருகின்றனர்.
இந்த சூழுலில் தான், “உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள மக்கள், நாட்டின் பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றலாம்” என்று, அந்நாட்டு ராணுவம் சமீபத்தில் அறிவித்தது.
இதனையடுத்து, அந்நாட்டின் ராணுவத்தில் ஏராளமானோர் அந்நாட்டின் துணை ராணுவப் படைகளில் இணைந்தனர். அதன் படி, அவர்கள் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுத்து பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தான், தமிழகத்தின் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்த சாய்நிகேஷ் என்ற இளைஞர், உக்ரைன் துணை ராணுவத்தில் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நமது இந்திய அரசு, இது குறித்து உரிய விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான், உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் பற்றிய முக்கியமான சில பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி,
- கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்ற இளைஞர், உக்ரைனில் உள்ள தேசிய விண்வெளி அறிவியல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
- உக்ரைனில் தற்போது போர் நிலவி வரும் சூழலில், சாய் நிகேஷ் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறார்.
- ராணுவத்தில் சேர்ந்த செய்தியை உறுதி செய்த இந்திய உளவுத்துறையினர், கோவையில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில்,
- சாய் நிகேஷின் கோவை வீட்டில் உள்ள அவரது ரூம் முழுவதும் ராணுவ வீரர்களின் புகைப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- குறிப்பாக, உயரம் குறைவாக இருந்த காரணத்தால், இந்திய ராணுவத்தில் சாய் நிகேஷால் சேர முடியாமல் போனதாகவும் அவரது பெற்றோரும் உளவுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
- இதனைத்தொடர்ந்து, உக்ரைனுக்கு படிக்க சென்ற சாய் நிகேஷ், போர் சூழலை பயன்படுத்தி அந்நாட்டு ராணுவத்தில் இணைந்து, ராணுவ வீரராகும் தமது கனவை அடைந்து இருக்கிறார், என்பதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
- மகன் சாய் நிகேஷ் குறித்த அனைத்து தகவலையும் கேட்டுத் தெரிந்துகொண்ட அவரது பெற்றோர், “எங்கள் மகன் சாய் நிகேஷை உடனடியாக மீட்டுத்தருங்கள்” என்றும், விசாரணை நடத்த வந்த உளவுத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.