மே மாத ஊரடங்கு.. கட்டுப்பாடுகளும் - தளர்வுகளும்!
By Aruvi | Galatta | Apr 30, 2021, 04:28 pm
கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் மே மாத போடப்பட்டுள்ள ஊரடங்கும் அது தொடர்பான கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதனை தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் தொற்று மிக தீவிரமாகப் பரவி வருகிறது. கொரோனாவின் 2 வது அலை காரணமாக, தமிழ்நாட்டில் தற்போது இரவு நேர
ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் முடிய உள்ள நிலையில், மே மாதத்திற்கான புதிய கட்டுப்பாடுகளுடனான தளர்வுகளைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் படி, புதிய அறிவிப்பில்..
- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- இரவு நேரத்தில் முழு ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
- மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், தேர்தல் பணியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- 3000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- சென்னை மெரினா கடற்கரை, கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பொது மக்கள் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள் கூட்ட அரங்குகள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
- மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழி முறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதி உண்டு.
- வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி மறுப்பு.
- தனியாக செயல்படுகின்ற மளிகை உள்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி
உண்டு. இந்த கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
- அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதி வழங்கப்படும்.
- உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
- விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க உத்தரவு.
- உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
- அனைத்து மின் வணிக சேவைகள் அனைத்தும், வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.
- தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்குத் தடையில்லை.
- கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் குடமுழுக்கு,
திருவிழா நடத்த அனுமதி இல்லை
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி மறுப்பு.
- இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கத் தடை.
- தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.
- கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதி மறுப்பு.
- சின்னத்திரை மற்றும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக்கு அனுமதி உண்ட.
- இருப்பினும் படப்பிடிப்புகளில் பங்கேற்கும் அனைத்து நபர்களும் கொரோனா பரிசோதனை, முக கவசம் மற்றும் சமூகவியல் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- இரவு நேரம் ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காலத்தில் இவற்றுக்கு அனுமதி உண்டு.
- மருத்துவமனைகள், மருந்தகங்கள், உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துறைகளுக்கும் பெட்ரோல் பங்க், உள்ளிட்டவற்றுக்கு அனுமதி எப்போதும் உண்டு.
- மருத்துவ தேவைக்காக ஆட்டோ மற்றும் வாகனங்கள் அனுமதி உண்டு.
- புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் கண்டிப்பாக http://eregister.tnega.org என்ற வலைத்தளத்தில் பதிவு செய்த e பாஸ் பெற்ற விவரத்தினை காட்டினால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.