ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வலியுறுத்தியுள்ளார்.

pt selvakumarநடிகர் சூர்யா, தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் பட சர்ச்சையால் நடிகர் சூர்யாவை வன்னியர் இன மக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் வன்னியர் மக்களை இழிவு படுத்தும் விதமாக ஜெய் பீம் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் வன்னியர்களின் மனம் புண்பட்டுவிட்டது என்றும் ரு.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும்  தெரிவித்தார். இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ்க்கு  நடிகர் சூர்யா பதில் அறிக்கையாக எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத  யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதியாகத்தான் நடந்து கொல்கிறாரகள் இதில் சாதி இன் மதம் மொழி பேதம் இல்லை சகமனிதனின் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தருகிறேன் சமத்துவம் சகோதரத்துவம் பெறுக அவரவர் வழியில் தொடர்ந்து செயல் படுவோம் என்று புரிதலுக்கு நன்றி என சூர்யா அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு கொடுத்துவருகினறனர். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் அதனை தொடர்ந்து நடிகை ரோகினி, இயக்குனர் பாரதிராஜா போன்ற திரை பிரபலங்கள் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கினறனர். எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் நாடு முழுவதும் நடிகர் சூர்யாவிற்கு உள்ளது. வன்னியர்கள்  விமர்சனங்களை தொடர்ந்து மக்கள் சமூக வலைத்தளங்களில் #istand withsurya  என்ற hashtag-யிட்டு மக்கள் தங்கள் ஆதரவுகளை சூர்யாவிற்கு  தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் குறித்து,  திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி செல்வகுமார் சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறியதாவது:  சினிமா உலகம் விழுந்து கிடக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் அதை ஊக்கப்படுத்த வேண்டும், இளைஞர்களின் கல்வி வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளிட்டவற்றை குறித்து அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு மற்றும் உதவி செய்யலாம் என்று தெரிவித்தார்.

மேலும் இளைஞர்களை வழிப்படுத்த எத்தனையோ விஷயங்கள் இருந்தும் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்துள்ளீர்கள் என அன்புமணிக்கு கேள்வி எழுப்பினார். இளைஞர்கள் மீது அன்புமணி ராமதாஸ்  கவனம் செலுத்த வேண்டும் என பி.டி செல்வகுமார் கேட்டுக்கொண்டார். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு சினிமாவில் உள்ள விஷயத்தை வைத்து மக்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதாக அன்புமணி மீது குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பான்மையான மக்கள் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அந்த படத்தை வைத்து சர்ச்சை செய்ய வேண்டாம் என அவர் வலியுறுத்தினார். ஜெய் பீம் படத்திற்கு எதிராக வழக்கு வேண்டாம் எனவும் பேசி தீர்த்து கொள்ளலாம் எனவும் அன்புமணிக்கு பி. டி. செல்வகுமார் வலியுறுத்தினார்.


இதனைத்தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள் மத்தியில்  சாதி, மதம் என்னும் விஷ விதைகளை தூவி பிரிவினை ஏற்பட்டு விடாமல் இருக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நடிகர் சூர்யா மீது தாக்குதல் நடத்துவோம் என சொல்லி விவகாரம் ரவுடியிசம் எனவும் அதை சொல்லி அவர்கள் மீது அரசு கைது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் வைத்தாலும் தங்களை காயப்படுத்துவது போல்  இருக்கும் என மத மற்றும் சாதிய நபர்கள் சிக்கல் செய்வார்கள் எனவும் எனவே இனி கதாபாத்திரங்களுக்கு பெயர் இல்லாமல் (xyz) என வைத்து தான்  படம் எடுக்க வேண்டும் எனவும் ஆவேசத்துடன் பி. டி. செல்வகுமார்   தெரிவித்தார்.


மேலும் சக நடிகர்களுக்கு அநீதி நடக்கின்ற பொழுது நடிகர்கள் தட்டி கேட்க வேண்டும் என வலியுறுத்திய அவர் இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ரஜினி கமல் விஜய் அஜித் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் குரல் கொடுக்க வேண்டும் அது அவர்களது கடமை என  கேட்டுக்கொண்டார். இல்லையென்றால் வருங்காலத்தில் அராஜகம் தலை தூக்கிவிடும் எனவும் அவர் தெரிவித்தார். நடிகர் சூர்யா அகரம் மூலம் எத்தனை ஏழை மாணவர்களை படிக்க வைத்திருக்கிறார் என தனக்கு தெரியும ஆனால் அவரைக் கேள்வி கேட்பவர்கள் எத்தனை குடும்பங்களுக்கு உதவி  செய்திருக்கிறார்கள் என சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். நடிகர் சூர்யா சமூக அக்கறை கொண்டவர், பெரும்பான்மையான மக்களின் ஆதரவு அவருக்கு உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் சபாபதி திரைப்பட விழாவில் நடிகர் சந்தானம் பேசிய பேச்சு ஜெய்பீம் படத்துடன் தொடர்புபடுத்தி சர்ச்சையாக்கப்படுவது  குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சந்தானம், என்ன எண்ணத்தில் அவ்வாறுகூறினார் என தனக்கு தெரியாது எனவும் ஆனால் நடிகர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் சாதி மத வேறுபாடுகள் இல்லை என திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி செல்வகுமார் தெரிவித்தார்.