சென்னை 72 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரபல சினிமா பாடகரான கானா பாலா, தோல்வி அடைந்து உள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளமாக மாறி உள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பண விநியோகம் நடைபெறுவதாக அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டின. இதனால், குறிப்பிட்ட சில இடங்களில் நேற்றைய தினம் மறு பாக்கு பதிவு நடைபெற்றது.

அதன் படி, மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு, 57 ஆயிரத்து 778 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆக மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 90 சதவீத வெற்றிகளை ருசித்து வருவம் சம்பவங்கள் தற்போது அரங்கேறி வருகிறது.

முக்கியமாக, மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் மிக அதிக வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி வருகின்றன. இதனால், எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சியில் உரைந்து போய் உள்ளனர்.

இந்த நிலையில் தான், சென்னை 72 வது வார்டில் சுயேட்சையாக களம் இறங்கி போட்டியிட்ட பிரபல சினிமா பாடகர் கானா பாலா, இன்று காலை நடைபெற்ற முதல் சுற்று முடிவில் 3,534 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்தார்.

அதன் படி, காலை முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட கிட்டதட்ட 468 வாக்குகள் அதிகம் பெற்று, கானா பாலா முன்னிலை வகித்து வந்தார். 

இதனால், சினிமா பாடகரான கானா பாலா வெற்றி பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், அந்த தொகுதியில் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன் படி பார்க்குபோது, கிட்டதட்ட 8303 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சரவணன் அபார வெற்றி பெற்றார். இதனால், எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா, தற்போது தோல்வி அடைந்து உள்ளார். 

அந்த வகையில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா, 6095 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளன.

இதனிடையே, மதுரை மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த பெண்களுக்கு பாஜக வேட்பாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்த குறிப்பிட்ட அந்த வார்டில், பாஜக  வெறும் 10 வாக்குகள் மட்டுமே பெற்று சோதனைக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.