நீதிமன்றத்திலேயே நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதால் அதிர்ச்சி.. பீதி.. பரபரப்பு..!
நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதி ஒருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சேலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சேலத்தில் அமைந்து உள்ள 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன். பாண்டியன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரது அலுவலக உதவியாளராக பிரகாஷ் என்பவர், அதே நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் பணி மாறுதலுக்கான இடமாற்றம் வழங்கபட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை எப்போதும் போல் சேலம் ஒருங்கிணைந்த நீதிம்னற வளாகத்தில் நீதிபதி பொன். பாண்டியன் இருந்து உள்ளார்.
அப்போது, அங்கு வந்த நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவர், பணிமாறுதல் குறித்து நீதிபதியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதற்கு, நீதிபதி பொன். பாண்டியன் பதில் அளித்து பேசி உள்ளார்.
அந்த நேரத்தில், அந்த நீதிமன்ற ஊழியர் பிரகாஷ், தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், நீதிபதியை குத்தியால் குத்தி உள்ளார். இதில், நீதிபதி பொன். பாண்டியனுக்கு மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பதறிப்போன நீதிபதி, சத்தம் போட்டு கூச்சலிடவே அங்கிலிருந்த சக வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஓடி வந்து பிரகாஷ்யை பிடித்து வைத்துக்கொண்டனர்.
இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த அஸ்தம்பட்டி காவல் போலீசார், சம்மப்பட்ட நீதிமன்ற ஊழியர் பிரகாஷை அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, நீதிமன்ற வாளகத்தில் நீதிபதி ஒருவர், சக நீதிமன்ற ஊழியரால் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.