கடந்த 40 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் தன்னிகரற்ற தொழில் துறை நிறுவனமாக உயர்ந்து அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பது ராம் ராஜ் காட்டன் நிறுவனம். கடந்த 1983 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் கலாச்சாரம், பாரம்பரியம், புதுமை, நேர்த்தி மற்றும் தரம் என்று அடிப்படையை காலம் காலமாக பின்பற்றி மக்களின் அபிமான பிராண்டாக வளர்ந்துள்ளது. சுதேச பிராண்ட் ராம்ராஜ் கட்டன் என்ற பெயரில் தென்னிந்தியாவில் வேட்டிகள், சட்டைகள், உள்ளாடைகள், பின்னலாடைகள், துணிகள் மற்றும் குழந்தைகள் பெண்களுக்கான உடைகள் என்று மிகப்பெரிய உற்பத்தியை செய்து ஏற்றுமதி நிறுவனங்களில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக ராம்ராஜ் காட்டன் திகழ்ந்து வருகிறது.
அடிப்படையாகவே பாரம்பரியத்தை காலத்திற்கு ஏற்ப கொண்டு சென்று காலச்சார அழகியலை மக்களிடம் ஊக்குவித்து மிகப்பெரிய பிராண்டாக உருவாகியுள்ள ராம் ராஜ் காட்டன் இதுவரை பல விருதுகளை வென்று பல லட்ச மனங்களை கவர்ந்து நம்பிக்கை ஒளியாக இருந்து வருகிறது.
40 ஆண்டுகால அசைக்க முடியாத நம்பிக்கை, ஈடு இணையற்ற அர்பணிப்புடன் பல வகையான உடைகளை உற்பத்தி செய்து புத்துயிர் பெற்று கொண்டிருக்கும் ராம்ராஜ் காட்டன் 2500 வகையான வேட்டிகளை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 50,000- க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்களின் நலள்களைப் பாதுகாத்து தலைநிமிர்ந்து நிற்கவும் தென்னிந்தியா முழுவதும் 15,000 பணியாளர்கள் நேரடியாகப் பணியாற்றவும் இந்நிறுவனம் வழிவகை செய்து வருகிறது.
இந்நிலையில் ராம்ராஜ் காட்டன் தனது 40 வது ஆண்டு விழாவை மைல்கல் விழாவாகவும் வரலாற்று நிகழ்வாகவும் சமீபத்தில் கொண்டாடியது. மேலும் கூடுதல் கொண்டாட்டமாக ராம் ராஜ் காட்டனின் 250வது விற்பனை நிலையம் விஜயவாடாவில் கடந்த ஜூன் 11 அன்று திறந்துள்ளது.
இந்த மாபெரும் துவக்க விழாவில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்டாராகவும் வலம் வரும் வெங்கடேஷ் டகுபதி அவர்கள் கலந்து கொண்டு 250 வது விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இவர்
தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான ராம்ராஜ் வேட்டிகள் மற்றும் சட்டைகளுகான பிராண்ட் அம்பாசடராகவும் செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் ராஜ் கட்டன் நிறுவனத்திற்கே உரிய அதே தரத்தில் உயர் ரக ஆடைகளுடன் புத்தம் புது பொலிவுடன் அனைத்து வயதினருக்கும் ஆடைகள், மிக குறைந்த விலையில் இருந்து 1 லட்சத்திற்கு மேல் விலை உள்ள குறிப்பிட்ட வகைகளிலான ஆடை ரகங்களும் கொண்டு இந்த கடை அமைந்துள்ளது. தற்போது இந்த வரலாற்று நிகழ்வையடுத்து மக்கள் பாரம்பரிய நிறுவனமான ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினை வாழ்த்தி வருகின்றனர்.