சிறுத்தை சிவா இயக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனிடையே ரஜினி காந்த் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தி நடிகர் மம்முட்டி சுவாரசியமான ட்வீட்டை பதிவுசெய்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. 


உடல் நிலை சீராக இருப்பதாகவும், ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் இதனால் தேர்தல் பணிகளில் தொய்வு இருக்காது என்றும் அறிவித்தப்படி அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் சொல்லப்பட்டுகிறது.