பாலியல் தொடர்பான வீடியோ வெளியானதால்.. பாஜக பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் விலகல்!
பாலியல் தொடர்பான வீடியோ வெளியானதால், “தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக” கே.டி. ராகவன் தெரிவித்து உள்ளார்.
தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருக்கும் கே.டி. ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கே.டி. ராகவன், “என்னையும் என் கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது” என்று, அவர் குறிப்பிட்டு உள்ளார்.
“எனவே, இது குறித்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன்” என்றும் கூறியுள்ள கே.டி. ராகவன், “இதனையடுத்தே, நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்” என்றும், தெரிவித்து உள்ளார்.
அத்துடன், “நான் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் என்றும், இதனை நான் சட்ட படி சந்திப்பேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.
“தர்மம் வெல்லும்” என்றும், அவர் தன்னுடைய டிவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.
மேலும், “தமிழக மக்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும் என்றும், என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்” என்று கூறியுள்ள கே.டி.ராகவன், “நான் கடந்த 30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.
“இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை நான் அறிந்தேன்” என்றும், அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஊடகவியலாளர் மதன் என்பவர், பாஜகவில் இணைந்தார். இவர், “மதன் டைரி” என்கிற பெயரில் “யூட்யூப் சேனல்” ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதன், “பாஜகவில் உள்ள சில தலைவர்கள், பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர் என்றும், அதுவும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர்” என்றும், அதில் பதிவு செய்திருக்கிறார்.
“அதற்காக சில இடங்களையும் சென்னையில் அவர்கள் வைத்து உள்ளனர் என்றும், இதில் 15 தலைவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும்” அதில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் படியே, “பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்” என்றும், அவர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இப்படியாக, பாலியல் தொடர்பான வீடியோ வெளியானதால், “தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக” கே.டி. ராகவன் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.