தட்டுப்பாடு இருக்கும் போது, ஏன் ஏற்றுமதி செய்யணும்?
Galatta | Apr 21, 2021, 04:30 pm
தமிழகத்தில் கொரோனா நோய் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் மறுபக்கம் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருதால் தடுப்பூசி தட்டுப்பாடும் மற்றும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா ம ற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் சூழலில் , ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை கூறியது, ’அவசர தேவைகளின் போது, இது போல அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கமானது. இதே போல் மற்ற மாநிலங்களும் நமக்கு உதவுகின்றன. நமக்கு மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்கு அனுப்பியுள்ளன” என்று கூறியுள்ளார்.