வடமாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தமிழக போலீசாரை கடுமையாக தாக்கியதால், 7 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் அதவும் ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்து உள்ள நஞ்சை ஊத்துக்குளியில்,பிரபல தனியார் எண்ணெய் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழலில் தான், இந்த எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வட மாநில இளைஞர் ஒருவர், நேற்று இரவு பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாரத விதமாக லாரியின் பின் பக்க சக்ரம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து உள்ளார்.

உடனடியகா இது சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

அப்போது, உயிரிழந்த வட மாநில இளைஞரின் உடலை, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல போலீசார் முயன்றனர். 

அந்த நேரத்தில், அங்கு பணியாற்றும் சக வட மாநில இளைஞர்கள், உயிரிழந்த இளைஞரின் உடலை எடுக்க விடாமல் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், “உயிரிழந்த வட மாநில இளைஞருக்கு 12 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் தொகை பெற்றுக் கொடுப்பதாக நிர்வாகத்தினர் கூறி உள்ளனர் என்றும், அவர்கள் வாய் உத்தரவாக கொடுத்த கொடுத்த இந்த வாக்குறுதியை, காசோலையாகவோ அல்லது முழு பணமாகவோ உடனடியாக தர வேண்டும்” என்று கூறி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த பணத்தை உடனடியாக தர முடியாமல், உயிரிழந்த நபரின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்று உள்ளனர். 

இதனால், அதிர்ச்சி அடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள், அந்த தனியார் நிறுவனத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதுடன், அங்கு வந்த போலீசாரையும் மிக கடுமையாக தாக்கி உள்ளனர்.

இப்படியாக, வட மாநில தொழிலர்கள் கடுமையாக தாக்கியதில், 7 போலீசார் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனால், இப்பகுதி முழுவதும் பெரும் கலவரமாக மாறிய நிலையில், அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டன.