“என்னை யாரும் கடத்தவில்லை” கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக வேட்பாளர் இந்திராணி பேட்டி..
வாடிப்பட்டி பேரூராட்சியில் அதிமுக பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்திவிட்டதாக, முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் வேட்பாளர் “என்னை யாரும் கடத்தவில்லை” என்று, கூறியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி வருகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று, தமிழ் நாட்டிலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் 19 ஆம் தேதி, ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி நடைபெறகிறது.
இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற உத்தரவிட்டு வருவதுடன், பணப்படுவாடாவை தடுக்க பறக்கும் படைகளும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அத்துடன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளும் பரபரப்பாக சூழல்வதை காண முடிகிறது.
இந்த நிலையில் தான், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது.
இதில், 9 வது வார்டு அதிமுக வேட்பாளராக இந்திராணியும், திமுகவின் சார்பில் கிருஷ்ணவேணியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதில், “அதிமுக வேட்பாளரான இந்திராணியை, அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் கடத்தி வைத்து, வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டி வருவதாகவும், அதிமுக வேட்பாளரை கடத்தி விட்டார்கள்” என்றும், குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், தலைமையிலான அதிமுகவினர் அதிமுக வேட்பாளரை கடத்தப்பட்டதாக கூறி உண்ணாவிரத போராட்டத்தில் வருகின்றனர்.
இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத வகையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த அதிமுக வேட்பாளர் இந்திராணி, “என்னை யாரும் கடத்தவில்லை” என்று, செய்தியாளர்கள் முன்பு வந்து கூறியிருக்கிறார்.
குறிப்பாக, “எனது உடல் நிலை சரியில்லாததால் நான் வேட்புமனுவை திரும்பப் பெற்றதாகவும்” அவர் விளக்கம் அளித்து உள்ளார்.
இதனால், “அதிமுக வேட்பாளரை கடத்திவிட்டதாக” கூறி, அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, பெரும் சர்ச்சையைக் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் குழம்பத்திற்கு ஆளாகி உள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.