இன்று தேசிய விவசாயிகள் தினம்.. டெல்லி விவசாயிகளின் நிலை என்ன?
By Abinaya | Galatta | Dec 23, 2020, 12:01 pm
இன்று ( டிசம்பர் 23 ) தேசிய விவசாயிகள் தினம். நாட்டின் முதுகெலும்ப்பு விவசாயம் என்று இந்தியாவில் பிரபலமாக சொல்லப்படுவது உண்டு. ஆனால் இன்று கடும் குளிரில் தலைநகர் டெல்லி லட்சகணக்கான விவசாயிகள் 28வது நாளாக போராடி வருகிறார்கள்.
மூன்று புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே கடை அடைப்பு, உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் நடைப்பெற்று வருகிறது.
விவசாயிகளுடனான மத்திய அரசின் பலகட்ட பேச்சு வார்த்தையும் தொடர்ந்து தோல்வியில் முடிந்து வந்துள்ளது. ஹரியானா மாநிலம் குருத்வாரா சீக்கிய பாதிரியார் ,65 வயதான பாபா ராம் சிங் என்றவர் அரசாங்கம் விவசாயிகளுக்கு நீதி வழங்க வில்லை. அநீதி ஒரு பாவம் செயல்..அந்த அநீதியைப் பொறுத்துக்கொள்வதும் கூட ஒரு பாவம். விவசாயி போராட்டத்தின் ஒரு பகுதியாக தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
நேற்று ஒரு விவசாயி, அறிமுகப்படுத்திய புதிய சட்டங்களை திரும்ப பெற கோரி மோடிக்கு தன் இரத்தத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
விவசாயிகள் கடும் குளிரில் இரவு பகலாக சாலைகளில் கிடப்பதும், இரத்தத்தில் கடிதம் எழுதுவதும் தான் இந்தியாவில் விவசாயிகளின் இன்றைய நிலை? இதை மத்திய அரசு பார்த்துக்கொண்டு இருக்கிறது. புதிய சட்டங்கள் மூலம் கார்பரேட் நிறுவனங்களும்தான் பயன்பெறுவர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விவசாயிகளின் தரப்பில் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் மத்திய அரசோ, பயிர்களுக்கு மட்டும்தான் ஒப்பந்தமே தவிர, நிலத்துக்கு அல்ல. வேற எந்த ஒப்பந்தமும் நிலத்தின் மீது கிடையாது. விவசாயிகளின் நிலம் முழு பாதுகாப்புடன் இருக்கும்.
விளைபொருளுக்கான கொள்முதல் விலை, வேளாண்மை ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏ.பி.எம்.சி மண்டிகள் தொடர்ந்து செயல்படும். ஏ.பி.எம்.சி மண்டிகள் இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை என்று பிடித்தம் பிடித்து வருகிறது. கொண்டு வந்த சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் என்றது அரசு, ஆனால் விவசாயிகளின் கோரிக்கையோ மூன்று சட்டத்தையும் திரும்ப பெறுவது தான்.
இந்நிலையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து, விவசாய சங்க நிர்வாகிகள் இன்று முடிவு செய்ய இருக்கிறது. இந்த முறை சுமூக முடிவு எட்டப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.