"காவல் உதவி" செயலியை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் "காவல் உதவி" செயலியை தொடங்கிவைத்தார்.
சென்னையில் குற்றசம்பவம் நடைபெறுவது புதிதல்ல. ஆனால் அதனை தடுக்க அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவிகிதம் குற்றங்கள் குறைவாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் பள்ளி கல்லூரி வளாகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை காவல்துறை கண்காணித்து வருகிறது. போதை பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடைநிலையில் விற்பனை செய்பவர் மட்டுமின்றி மூலகாரணமானவர் வரை கைது செய்யப்படுகின்றனர். போதை பொருளிற்கு எதிராக 240 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் போதை பொருளிற்கு எதிரான தன்னார்வலர்கள் ஒன்றிணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்களில் மற்றும் வழிதடங்கள் குறிப்பிட்ட நேரங்களில் காவலர்கள் தொடர்ந்து ரோந்து பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் தேவைப்படும் பட்சத்தில் புறநகர் ரயில்களில் காவலர்கள் பாதுகாப்பிற்கு பயணிப்பது போல, சென்னை மாநகர பேருந்திலும் இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் பயணிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று தெறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து காவல் துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களையும், தொழில் நுட்ப யுத்திகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல் துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் "காவல் உதவி" செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும். "காவல் உதவி" செயலியின் சிறப்பம்சங்கள்: "அவசரம்" உதவி பொத்தான் - பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற "அவசரம்" என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) - பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க "Dial-100" என்ற செயலி "காவல் உதவி" செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும். அலைபேசி வழி / புகார் அளித்தல் (Mobile Based Complaint) - பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியோர்கள் ஆகியோர் அவசர கால புகார்களை, படங்கள்/ குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரை பதிவு செய்யலாம்.
இந்நிலையில் இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) - பயணங்கள் மேற்கொள்ளும் போது, அவசர காலத்தில் பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர் அல்லது நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி (Police Station Locator), காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலை பேசி விவரம் அறிதல் (Control Room Directory), இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள் (Cyber Financial Related Complaint), இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி (Other Emergency Helplines), அவசர கால அறிவிப்புகள் / இதர தகவல்க ள் அறியும் வசதி (Alert / Notification messages), வாகன விவரம் அறிதல் (Vehicle Verification), போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி (E-Payment), தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை (Police Verification Services), தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார் (Lost Document Report), CSR / FIR - குறித்த விவரம், காவல் துறையின் சமூக ஊடக சேவைகள் (Social Media Connect), காவல் துறையின் குடிமக்கள் சேவை செயலி (TN Police Citizen App) / 112 இந்தியா (112- India App) ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம். இச்செயலியை Google Play Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
அதனைத்தொடர்ந்து கடந்த வாரம் முக்கிய சிக்னல்களில் ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளிடம் சாலைவிதிகளை மதிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசாரின் பாதுகாப்பிலும் தனிகவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் பொறுத்தக்கூடிய நவீன கேமராக்கள், ‘ரேடியம்’ பொருத்தப்பட்ட ‘ஜாக்கெட்’ போன்றவைகள் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரங்களில் சிக்னல் சந்திப்புகளில் பணியாற்றும் போலீசாருக்கு பேட்டரி உதவியுடன் சிவப்பு நிறத்தில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகளுடன் கூடிய ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.