ஒரே மேடையில் 3 பெண்களை திருமணம் செய்த 42 வயது நபரால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
“தமிழ்நாட்டில், 90's கிட்ஸ் பசங்களுக்கு கல்யாணத்திற்கு ஊர்ல ஒரு பொண்ணு கூட கிடைக்காம அவன் அவன் திண்டாடிக்கிட்டு இருக்கான். இங்க என்னடானா, ஒருத்தன் ஒரே நேரத்துல அதுவும் தன்னுடைய 42 வயசுல, 3 பொண்ணுங்களை ஒரே நேரத்துல “ஜாலியா ஜிம்கானா” வாக, கல்யாணம் செய்கிறார். 'சரி நல்லா இருந்துட்டு போயா..!' என்று, வடிவேலு பாணியில் வாழ்த்துவதை தவிர, வேறு வழியில்லை” என்பது மட்டும் 90s கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ்களின் ஏக்க பெரு மூச்சில் தெரிகிறது.
அதாவத, அண்மையில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படம் வெளியான போது, விஜய் சேதுபதி 2 ஹீரோயின்களுடன் இருந்தது 90’s கிட்ஸ்களின் சாபத்தையும், ஏக்கத்தையும் சம்பாதித்தது.
ஆனால், இந்த படம் வெளியான பிறகு தான் 90’s கிட்ஸ்களுக்கே பெரும் நிம்மதி பெருமூச்சு வந்தது. நாயகன் விஜய்சேதுபதி, கடைசியில் அந்த இரண்டு ஹீரோயினுடனும் சேரவில்லை என்றாலும், ‘வாழ்ந்த இப்படி வாழனும்னு’ என்று, பல 90’s கிட்ஸ்களின் கனவு படமாகவு “காத்துவாக்குல இருண்டு காதல்” படம் மாறிப்போனது.
ஆனால், இந்த “காத்துவாக்குல இரண்டு காதல்” படத்துக்கே டஃப் கொடுக்கும் விதமாக, மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்திருக்கிறது.
அதாவது, அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த 42 வயதான சமர்த் மௌரியா என்பவருக்கு, அந்த பகுதியில் வேறு வேறு காலகட்டங்களில் 3 பெண்களுடன் காதல் மலர்ந்திருக்கிறது.
இதனால், அந்த 3 பெண்களுடனும் அவர் கடந்த 15 ஆண்டுகளாக தனித் தனி வீடுகளில் 'லிவிங் டுகெதர்' ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இதனையடுத்து, அந்த 3 பெண்களுக்கும் மொத்தமாக 6 குழந்தைகள் பிறந்திருக்கிறது.
இந்த நிலையில் தான், அந்த 6 குழந்தைகளின் முன்னிலையில் 3 பெண்களையும் தற்போது மர்த் மௌரியா திருமணம் செய்து உள்ளார்.
அதாவது, மர்த் மௌரியா வசிக்கும் மோரி பாலியா என்ற அந்த கிராமத்தில், பழங்குடி வழக்கப்படி 3 நாட்கள் வரை நடந்த இந்த திருமண விழாவில், அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு திருமண ஜோடிகளை வாழ்த்தி உள்ளனர். இதனால், அந்த திருமணம் பெரிய அளவில் அங்கு பேசும் பொருளாக மாறி உள்ளது.
இந்த திருமண நிகழ்வு குறித்து பேசிய மாப்பிள்ளை சமர்த் மௌரியா, “போபாலில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தில் நான் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தேன்” என்று, குறிப்பிட்டார்.
மேலும், “கடந்த 2003 ஆம் ஆண்டில் எனது முதல் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன் என்றும், அதன் தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக மற்ற 2 பெண்களுடன் திருமணமாகமலேயே நான் அவர்களுடன் வாழ்ந்து வருகிறேன்” எனறும், தெரிவித்து உள்ளார்.
என்றாலும், இந்த திருமணம் பற்றிய செய்தியை கேள்விப்பட்ட நம்ம ஊர் 90’ஸ் கிட்ஸ்கள், ஏக்க பெரு மூச்சில் “போ.. போ.. நல்லா இருந்துட்டு போ..” என்று, வேறு வழித் தெரியாமல் வாழ்த்தி வருவது” குறிப்பிடத்தக்கது.