எதிர்காலத்தை சரியான வழியில் கட்டமைத்திட கல்வி மிக முக்கியம், அந்த கல்வியை அனைவரும் எதிர்பார்க்கும் அளவு அதிக தரத்துடனும் வசதியுடனும் தரும் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்று சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். 1988 ல் மாபெரும் கல்வி கனவுடன் தொடங்கப்பட்ட சத்திய பாமா நிறுவனம் தனது 35 வது ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக வருடாந்திர கலாச்சாரா விழா 2023 சமீபத்தில் நடைபெற்றது.
சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்கலைகழக துணைத் தலைவர்கள் திருமதி.மரியா பெர்னாட்டி தமிழரசி, திரு.ஜெ.அருள் செல்வன், செல்வி மரிய கேத்தரின் ஜெயப்பிரியா ஆகியோர் மற்றும் நிர்வாகத்தின் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்கைலையில் பணியாற்று நிர்வாக ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் தமிழ் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமீபத்தில் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.மரியஜீனா ஜான்சன் அவர்கள் நடிகை நயன்தாராவை “சத்யபாமா பிராண்ட் அம்பாஸடர் 2023” என்று அறிவித்தார்.
இந்த மாபெரும் விழாவில் முக்கிய நிகழ்வாக சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரின் சிந்தனையில் உருவான "மதுகை" (The Strength - தி ஸ்ட்ரெங்த்) என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் நயன்தாரா. மதுகை என்ற திட்டத்தின் மூலம் சுகாதாரப் பொருட்கள் மற்றும் அதிக கலோரி சத்துக்கள் அடங்கிய தொகுப்புகளை அரசு மேல்நிலை பள்ளி மாணவிகளிடம் விநியோகிக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முடிகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக பல்கலைக்கழகத்தின் வேந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராமங்களில் உள்ள 15 அரசு பள்ளிகள் நேரடியாக பயனடைய முடிகிறது. இந்த மாபெரும் மக்கள் பணியில் சத்தியபாமா கல்வி நிறுவனம் அயராமல் உழைக்க முடிவு எடுத்துள்ளது. இதனையடுத்து இந்த திட்டம் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக நடித்து முன்னணி நடிகையாக தனித்து நின்று தனக்கான அடையாளத்தை அயராமல் உழைத்து பெற்றவர்.தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு திருமணமாகி இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
சத்தியபாமா கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா மாணவர்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறி உரையாற்றினார். அதில் அவர் மாணவர்களின் பழக்க வழங்கம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பெற்றோர்களிடம் நேரத்தை செலவிடுங்கள் என்று பொதுவான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிலையில் நயன்தாரா சத்தியாபாமா கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் "மதுகை" என்ற திட்டத்தை சத்யபாமா பல்கலைகழகத்தின் பிராண்ட் அம்பாஸடர் நயன்தாரா மற்றும் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் தொடங்கி வைத்தனர்.#Nayanathara @SathyabamaSIST @VigneshShivN #Galatta pic.twitter.com/RXaK6ewnAd
— Galatta Media (@galattadotcom) February 11, 2023