இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர்... கேன் வில்லியம்சன் விலகல்... வெளியான காரணம்!

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர்... கேன் வில்லியம்சன் விலகல்... வெளியான காரணம்! - Daily news

இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ள சம்பவம் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. உலகக் கோப்பை முடிவடைந்த 2 நாட்களில், இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்க நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது.

k1

 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று ஜெய்ப்பூர் வருகை தந்தது. மேலும் டி 20 உலக கோப்பை தொடரில் ஏற்கனவே பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருந்ததால் அவர்கள் தனி விமானம் மூலமாக ஜெய்ப்பூருக்கு வந்தனர். 

இந்த சூழலில் நடப்பு  உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் தகுதிச்சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, உலக கோப்பையில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. அதோடு தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். கேன் வில்லியம்சனின் பனிச்சுமையை குறைப்பதற்காக அவருக்கு டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

k2

எனினும் கேன் வில்லியம்சன் டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கான்பூரில் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், நியூசிலாந்து டெஸ்ட் அணியுடன் சேர்ந்து கேன் வில்லியம்சன் பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

இதன்படி நாளை தொடங்கும் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து டி20 அணியிலிருந்து கேன் வில்லியம்சன் வெளியேறியதால் மாற்று வீரரை நியூசிலாந்து அணி இதுவரை அறிவிக்கவில்லை. பெளல்ட் டி20 போட்டியிலிருந்து விலகிய நிலையில், கேன் வில்லியம்சனும் இல்லாதது இந்திய அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Leave a Comment