சினிமாவில் நடப்பது போன்றே, நிஜ வாழ்க்கையிலும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்” திருமணம் நடந்து உள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா மாவட்டத்தில் உள்ள பாண்டா கிராமத்தை சேர்ந்த சந்தீப் ஓரான் என்ற இளைஞன், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அந்த இளைஞன் அந்த பகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.
இதனையடுத்து, அந்த பெண்ணுடன் திருமணம் ஆகாமலே லிவ் -இன் லைப்பில் கடந்த 3 வருடங்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
இதனையடுத்து, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு தற்போது ஒன்றரை வயது நடக்கிறது.
இதனையடுத்து, அந்த சந்தீப், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று உள்ளார்.
அப்போது, அங்கு பணிபுரியும் சுவாதி குமாரி என்ற இளம் பெண்ணுடன், அவனுக்கு காதல் ஏற்பட்டு உள்ளது.
இப்படியாக, இருவரும் நெருங்கிப் பழகி காதலித்து வந்த நிலையில், நாளடைவில் இவர்களது காதல் விசயம் சந்தீப் குடும்பத்தினருக்கும் முதல் காதலியான குசும் லக்ரா குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது.
இதனால், இரு தரப்பினரும் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், சம்மந்தப்பட்ட அந்த இரு பெண்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, இரு காதலிகளையும் சந்தீப் சமாதானம் செய்த நிலையில், அந்த இரு பெண்களும் அவர்களது குடும்பத்தில் பேசி, அவர்களது குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து உள்ளனர்.
இதன் காரணமாக, சந்தீப்பின் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலிப்பதற்கு, அந்த இரு பெண்களின் குடும்பத்தினர் பெரிதாக எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, அந்த இரு காதலிகளையும் ஒரே நேரத்தில் சந்தீப் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த திருமணத்திற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கிராம பஞ்சாயத்தில் அந்த 3 பேரையும் நிறுத்தி உள்ளனர்.
அப்போது, காதலன் சந்தீப், “நான் எனது இரு காதலிகளான குசும் லக்ரா, சுவாதியை தான் ஒன்றாக திருமணம் செய்வேன்” என்று, கடைசி வரையில் அடம் பிடித்து நின்று உள்ளார்.
இதனால், வேறு வழி தெரியாமல் பஞ்சத்தினரும் கடைசியில் சம்மதம் தெரிவித்த நிலையில், “ஒரே சமயத்தில் இரு பெண்களுக்கும் அந்த காதலன் தாலி கட்டி, ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம்” செய்து கொண்டான்.
திருமணத்திறகுப் பிறகு, “காத்துவாக்குல ரெண்டு காதல்” திருமணம் குறித்து பேசிய காதலன் சந்திப், “2 பெண்களை திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால், நான் இருவரையும் காதலிக்கிறேன். இவர்களில் ஒருவரை கூட விட்டு பிரிய என்னால் முடியாது” என்று, ஒரே போடாக போட்டு உடைத்தார்.
இதனிடையே, I love you 2 என்று நிஜத்தில் நடந்த “காத்துவாக்குல ரெண்டு காதல்” திருமணம் பற்றிய போட்டோக்கள் தற்போது இணையத்தில் பெரும் ரைவலாகி வருகிறது. இதற்கு, இணையவாசிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கேலியும், கிண்டலுமாக தெரிவித்து வருகின்றனர்.