மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ (Ramesh Pokhriyal Nishank) கூட்டு நுழைவுத் தேர்வு (JEE - மெயின்ஸ்) 2021 பிப்ரவரி முதல் நான்கு முறை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 


நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் 2021 இன் தேதிகள் மற்றும் பாடத்திட்டங்கள் (Dates and Syllabus of NEET and JEE Exams 2021) தொடர்பாக மாணவர்களின் பல்வேறு கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. வழக்கமாக JEE-Mains ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும். அடுத்த கல்வி ஆண்டில் சேருவதற்கான ஜே.இ.இ. தேர்வை 4 முறை எழுத வசதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 


மேலும் தேர்வுக்கு கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்று தெரிவித்ததுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்களில் தலா 30 கேள்விகள் என்ற நிலையை தலா 25 கேள்விகள் என்று மாற்றுவதற்கு பரிசீலனை நடந்து வருவதாக கூறினார்.  


கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் சிரமங்கள் ஒருபுறம் இருந்தாலும் போட்டித் தேர்வுகள், ரத்து செய்யப்படாமல் மாணவர்களின் வாழ்க்கை நலன் கருதி இந்த ஆண்டு தேர்வுகள் நடப்படுகிறது. தேர்வுகளை ரத்து செய்திருந்தால் மாணவர்களுக்கு ஒரு வருடம் வீணாகி இருக்கும். மேலும் மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள எந்தவொரு அரசும் செய்யும் செயலைத்தான் மத்திய அரசும் செய்துள்ளது.


கல்வியாண் டில் சேர்வதற்கான JEE தேர்வு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி, தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை என 4 முறை நடத்தப்படும், மாணவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப எத்தனை முறையும் தேர்வு எழுதலாம்.

இதனால் மாணவர்களின் மன உளைச்சலை குறையும். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அந்த மதிப்பெண்ணே தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  மாணவர்களுக்கான தேர்வு தேதிகளை விரைவில் அறிவிக்க அதிகாரிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.