இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார் -மு.க ஸ்டாலின் இரங்கல்
இந்தியாவின் முதல் மனநல பெண் மருத்துவர் சாரதா மேனன், வயது மூப்பு காரணமாக காலமானார்.
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் , சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். 1923-ம் ஆண்டு மங்களூரில் கே.சங்கர மேனன் – நாராயணி தம்பதியின் மகளாகப் பிறந்த சாரதா மேனன், சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து, மருத்துவப் பட்ட மேல் படிப்பை டெல்லியில் முடித்தார். இவரை 1959-ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளராகத் தமிழ்நாடு அரசு நியமித்தது.
மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அத்துறையில் ஆய்வுகள் தொடரவும் 1985-ம் ஆண்டு ‘ஸ்கிசோஃப்ரெனியா ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை நிறுவி பணியாற்றி வந்தார். இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1992-ம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ‘அவ்வை விருது’ வழங்கி மதிப்பளித்தது.
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் , சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.அவரின் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,சாரதா மேனன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் ,"இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன் , என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.