“என்னோடு வா.. சந்தோசமாக வாழலாம்..” இளம் பெண்ணை அழைத்தச் சென்ற போலீஸ்!
போலீஸ் நண்பருடன் கள்ளக் காதல் ஏற்பட்டு, இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையை தொலைத்து உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்து உள்ள செவ்வூர் கிராமத்தை சேர்ந்த 30 வயதான கனகராஜ் என்பவருக்கும், அங்குள்ள பரமக்குடி அடுத்து உள்ள நண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 22 வயதான இளம் பெண் கௌசல்யாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.
திருமணத்திற்கு பிறகு, கணவன் - மனைவி வரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில, ஒரு போலீஸ்காரர் மூலம் இவர்களது வாழ்க்கை திசைமாறியிருக்கிறது.
அதாவது, சமீபத்தில் கௌசல்யா, தன்னுடன் பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரிப் பருவத்தில் நண்பராக இருந்த பார்த்திபன் என்ற பழைய நண்பனை சந்தித்து உள்ளார். இந்த பார்த்திபன் தற்போது ராமநாதபுரத்தில் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர்களது சந்திப்பில், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்ட நிலையில், இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு உள்ளனர்.
இதனையடுத்து போலீசான பார்த்திபன், தினமும் கௌசல்யாவுடன் பேசி வந்திருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரும் மணி கணக்கில் பேசி அரட்டை அடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விசயம், கௌசல்யாவின் கணவர் கனகராஜ்க்கு தெரிய வந்த நிலையில், தனது மனைவி கவுசல்யாவை அவர் கண்டித்து உள்ளார்.
ஆனாலும், கணவனின் கண்டிப்பை துளியும் கண்டுகொள்ளாத அவரது மனைவி, செல்போன் பேச்சை துளியும் நிறுத்தாமல் அப்படியே தொடர்ந்து உள்ளார்.
இதனால், கணவன் கனகராஜ்க்கும் - மனைவி கௌசல்யாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
ஒரு கட்டத்தில், தனது நண்பரான பார்த்திபனிடம் “நம் விசயம் தெரிந்து என் கணவன் என்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் நான் நிம்மதியாக வாழ முடியவில்லை” என்றும், அந்த பெண் கூறி கண்ணீர் வடித்து உள்ளார்.
இதனைக் கேட்ட அந்த போலீஸ் நண்பன், “நீ என்னோடு வந்து விடு, நாம் சந்தோசமாக வாழலாம்..” என்று, கூறியதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறிய கௌசல்யா, மதுரையில் தனது போலீஸ் நண்பரான பார்த்திபனுடன் ஒன்றாக வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.
இதனையடுத்து, தனது மனைவி காணம் என்று, அவரது கணவன் கனகராஜ், அங்குள்ள சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த சத்திரக்குடி போலீசார், கௌசல்யா சென்ற கார் நம்பரை வைத்து அதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுப்பிடித்து, அவரைச் சத்திரக்குடி காவல் நிலையம் அழைத்து வந்து உள்ளனர்.
அத்துடன், காவல் நிலையத்தில் கனகராஜ் மற்றும் கௌசல்யாவின் குடும்பத்தினரை வரவழைத்து “இனி, இது போன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது” என்று கூறியதுடன், “சிறிது காலம் உன் பெற்றோருடன் சென்று நீ அவர்களுடன் இருக்க வேண்டும்” என்றும், அறிவுரை கூறி அனுப்பி வைத்து உள்ளனர்.
மேலும், “கனகராஜ் கோபம் தீர்ந்தவுடன் அவருடன் சமாதானமாகப் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம்” என்றும், போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.
அதனை ஏற்றுக்கொண்ட கௌசல்யா, தனது பெற்றோருடன் சென்று வசித்து வந்துள்ளார்.
ஆனால், அதே நேரத்தில் தொடர்ந்து தனது கள்ளக் காதலனான போலீஸ் நண்பன் பார்த்திபன் உடன் அந்த பெண் தொடர்ந்து பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கவனித்த அந்த பெண்ணின் பெற்றோர்களும் தங்களது மகளை கண்டித்து உள்ளனர்.
இதனாால், மனமுறைந்த கௌசல்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை குடித்து மயக்க நிலையில் இருக்கவே, வீடு திரும்பிய அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்து அவரை காப்பாற்றி உள்ளனர்.
ஆனால், வீடு திரும்பிய மறுநாள் மீண்டும் கௌசல்யா எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் இதனை யாரிடமும் கூறாமல், அவர்களாகவே கௌசல்யாவை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உடலை எரித்து உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், “தொடர்ந்து எங்களது பேச்சைக் கேட்காமல் எங்கள் குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் கௌசல்யா, தனது கள்ளத் தொடர்பை மீண்டும் தொடர்ந்து வந்ததால், கோபத்தில் நாங்கள் கௌசல்யாவின் கழுத்தை நெறித்ததில் அவர் உயிரிழந்து விட்டார்” என்றும், உண்மையை கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கௌசல்யாவின் தாய் அமிர்தவல்லி, தந்தை தென்னரசு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, பெற்ற மகளையே பெற்றோர்கள் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.