நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குடும்பம் குடும்பவமாக போட்டியிட்டவர்கள் வரிசையாக வெற்றி வாகை சூடி வருவது பலரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அதன்படி, இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், இந்த தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவி, மாமியார் - மருமகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி வேட்பாளர் என பலரும் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.

அதன்படி,

தாய் - மகன்

- மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 13, 8 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தாய் வள்ளி மயில், மகன் மருதுபாண்டியன் அமோகமாக இந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.

மாமியார் - மருமகள் வெற்றி

- விருதுநகரில் 26 மற்றும் 27 வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மருமகள் சித்தேஸ்வரியும், மாமியார் பேபியும் இந்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று உள்ளனர்.

கணவன் - மனைவி

- திருவாரூர் நகராட்சி தேர்தலில் 1 வது வார்டு மற்றும் 2 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கலியபெருமாள், மலர்விழி தம்பதியினர் வெற்றி பெற்றதுடன், தங்களது மாஸ் காட்டி உள்ளனர்.

- குறிப்பாக, அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் 4, 5 வது வார்டில் போட்டியிட்ட மனைவி ரேணுகா ஈஸ்வரி, கணவன் கோவிந்தராஜ் ஆகியோர் அசத்தல் வெற்றிபெற்றனர்.

- அதே போல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 21 வது வார்டில், திமுக முன்னாள் அமைச்சர் நாராயணசாமியின் பேத்தி மீனாட்சி சூரிய பிரகாஷ் வெற்றி பெற்று உள்ளார்.

அண்ணன் - தங்கை

- தென்காசி நகராட்சியில் 14 மற்றும் 15 வார்டுகளில் பாஜக வேட்பாளர்களான அண்ணன் - தங்கை வெற்றி பெற்று உள்ளனர்.

மாற்றுத்திறனாளி வேட்பாளர்

- நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி 7 வது வார்டில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட மாற்றுத்திறனாளி வேட்பாளர் நியாஸ் வெற்றி பெற்று உள்ளார்.

வெற்றி பெற்ற திருநங்கை

- வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் அமோகமாக வெற்றி பெற்று உள்ளார்.