ஆட்சியை பிடித்துள்ள திமுக முன் நிற்கும் சவால்கள் என்ன?
By Aruvi | Galatta | May 02, 2021, 07:50 pm
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ள திமுக முன், சில சவால்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவை என்ன என்பதை தற்போது பார்த்து விடலாம்..
தமிழ்நாட்டில் கடந்த 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க இருக்கிறது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி திமுக 118 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இவற்றில், திமுக கிட்டதட்ட 35 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதன் காரணமாக, தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 150 முதல் 160 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், எதிர்பார்கக்ப்படுகிறது. இதில், 156 தொகுதிகளில் திமுக தற்போது வரை முன்னிலையில் உள்ளன.
அதே போல், அதிமுக 68 தொகுதிகளில் தற்போது முன்னிலையில் இருக்கிறது. முக்கியமாக, தமிழத்தில் கிட்டதட்ட 12 தொகுதிகளில் அதிமுக தற்போது வெற்றி பெற்று உள்ளது.
அத்துடன், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியமாகும். ஆனால், இதில் திமுக தற்போது 150 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில், முன்னிலையில் இருப்பதால், அதன் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் தான், தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கும் திமுகவுக்கு பெரும் சவாலாக நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2 ஆம் அலை இருக்கிறது.
தற்போது, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 4 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,689 பேர் கொரோனாவாதில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.
அதே போல், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பானது 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. சென்னையில் மட்டும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனா தொற்றால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி தலைமயிலான தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தி உள்ளது. இவற்றுடன், வேளை நாட்களில் பல்வேறு அதிரடியான கட்டுப்பாடுபாடுகளையும் விதித்து உள்ளது.
அதே போல், இந்த கட்டுப்பாட்டில், “வணிக வளாகங்கள், திரையரங்கம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை திறக்க அனுமதி மறுத்து, அவற்றும் பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
அத்துடன், இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவத்தித்து இருந்தது.
அதே போல், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு என்று, அடுக்கடுக்காக பல சவால்கள், புதிதாக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பு தற்போது இருக்கின்றன. அவர், மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகளை கேட்டுப் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே விதிக்கப்பட்டு இருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளால் பொது மக்கள் மிக கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில் தான், முழு ஊடங்கு போன்ற இன்னும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது, பொது மக்கள் மத்தியில் இன்னும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறப்படுகிறது.
அதே போல், மோடி தலைமையிலான மத்திய அரசு கூட, முழு ஊரடங்கை இறுதி கட்ட ஆயுதமாக மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும் என்று, மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுதான், திமுக தலைவர் முன் இருக்கும் மிகப் பெரிய சவலாக இருக்கிறது. அவற்றை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.